பாலாவை மிஞ்சிய சைக்கோ இயக்குனர் இவர்தான்.. செவுளில் விட்ட அறை, வாழை மட்டையில் வாங்கிய அடி

Director Bala: இயக்குனர் பாலா படப்பிடிப்பு தளத்தில் எந்த அளவுக்கு மூர்க்கத்தனமாக நடந்து கொள்வார் என்பது அனைவருக்கும் தெரியும் காட்சியில் திருப்தி இல்லாவிட்டால் அந்த நடிகரின் கதை அதோ கதி தான். அந்த அளவுக்கு அவர் நடிப்பவர்களை சக்கையாக பிழிந்து விடுவார். ஆனால் அவரையே மிஞ்சும் அளவுக்கு ஒரு சைக்கோ இயக்குனரும் இருக்கிறார்.

பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த மாரி செல்வராஜ் தான் பாலாவுக்கு குருவாக இருக்கும் அந்த இயக்குனர். இவர் தன்னுடைய காட்சிகளில் ரியாலிட்டி இல்லை என்றால் யார் என்ன என்று கூட பார்க்காமல் அடி வெளுத்து விடுவாராம். அப்படி இவரிடம் அடி வாங்கியவர்கள் ஏராளம்.

ஆனால் யாரிடம் தன் அதிகாரத்தை காட்ட முடியுமோ அவர்களிடம் தான் இவர் இந்த மூர்க்கத்தனத்தை காட்டுவாராம். அந்த வகையில் பரியேறும் பெருமாள் படத்தில் ஹீரோவாக நடித்த கதிர் இவரால் படாதபாடு பட்டிருக்கிறார். ஒரு காட்சியின் போது இவரை காலில் செருப்பு இல்லாமல் முள் பாதையில் இயக்குனர் ஓட விட்டிருக்கிறார்.

காட்சி சரியாக வந்த போதும் கூட இவர் திரும்பத் திரும்ப ஓட விட்டாராம். அந்த சமயத்தில் கதிர் ரொம்பவே சிரமப்பட்டு இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் காட்சி முடியும் போது அவர் காலில் ரத்தம் சொட்ட சொட்ட தான் வந்து நிற்பாராம். இதனாலேயே அவர் மூன்று நாட்கள் மருத்துவமனையில் அட்மிட் ஆகும் நிலைக்கும் ஆளாகி இருக்கிறார்.

அதேபோன்று அடிவாங்கும் ஒரு காட்சியில் எதார்த்தம் இல்லை என்பதற்காக வாழை மட்டையை வைத்து நிஜமாகவே அடி வெளுத்து விட்டாராம் மாரி செல்வராஜ். மேலும் அப்படத்தில் கதிருக்கு அப்பாவாக நடித்த நடிகரும் இவரிடம் அடிவாங்கி இருக்கிறார். ஒரு காட்சியில் டயலாக் சரியாக சொல்லவில்லை என்பதற்காக அவரின் செவுளிலேயே அறை விட்டு இருக்கிறார்.

இதனால் துடித்துப் போன அந்த பெரியவர் நடிக்க மாட்டேன்னு சொன்னவன கூப்பிட்டு வந்து இப்படி அடிக்கிறியா என்று ஆதங்கத்தோடு கேட்டிருக்கிறார். அதன் பிறகு கூட மாரி செல்வராஜ் இப்படித்தான் நடந்து கொண்டாராம். இது போன்றவர்களை அடித்தால் நம்மை திருப்பி அடிக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் தான் அவர் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார்.

இதுவே இவரின் அடுத்தடுத்த பட ஹீரோக்களான தனுஷ், உதயநிதியாக இருந்தால் இப்படி நடந்து கொள்வாரா என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. மேலும் அதிகாரத்தை செலுத்துவது தான் ஜாதி என்று சொல்லும் இவருக்கு மற்றவர்களை குறை சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறது. இதைத்தான் தற்போது பலரும் கேள்வியாக கேட்டு அவரை வறுத்து எடுத்து வருகின்றனர்.