அரசியலில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு மிகப்பெரிய இடம் இருக்கிறது. சினிமாவில் பிரபலம் ஒருவரின் சம்பளத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். ஏனென்றால் கதாநாயகனாக நடித்த காலகட்டங்களில் எம்ஜிஆர் வாங்கியதை விட 80களில் பிரபலம் ஒருவர் முதல் படத்திலேயே 4 மடங்கு சம்பளம் அதிகமாக பெற்றுள்ளார்.
ரஜினி நடித்த பொல்லாதவன் படத்திற்கு பிறகு எம்ஜிஆர் கலந்து கொண்ட மீட்டிங்கின் போது, ரஜினியை பார்த்து அவருக்கு என்ன சம்பளம் கொடுக்கிறீர்கள்? என்று கேட்டிருக்கிறார். பிறகு ரஜினியின் சம்பளத்தை கேட்டு மிகவும் எம்ஜிஆர் ஆச்சரியப்பட்டுள்ளார்.
ஏனென்றால் ஒரு காலகட்டத்தில் எம்ஜிஆர் வங்கிய சம்பளத்தை விட நான்கு மடங்கு உயர்வாக சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த் வாங்கிருக்கிறார். முதல் படத்திலேயே ரஜினிக்கு அதிக தொகையை சம்பளமாக கொடுத்திருக்கின்றனர். இவ்வளவு சம்பளம் கொடுத்தால் தயாரிப்பாளர்களுக்கு லாபகரமாக இருக்குமா? என்றும் எம்ஜிஆர் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ரஜினியின் படத்தைப் பொறுத்தவரை அந்த காலத்தில் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதிலும் ரஜினி நடிப்பில் 1980 ஆம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ் ரவி வித்யா மூவிஸ் நல்ல லாபம் பார்த்ததாகவும், எம்ஜிஆரிடம் அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.
அந்த அளவிற்கு ரஜினிகாந்திற்க்கு தமிழ் சினிமாவின் நல்ல மார்க்கெட் இருக்கிறது என்பதை தயாரிப்பாளர்கள் எம்ஜிஆரிடம் தெரிவித்தனர். இதைக் கேட்டதும் சிறிது நேரம் அமைதியாக இருந்த எம்ஜிஆர், இந்த விஷயத்தை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் இருந்தார். இப்படி
சூப்பர் ஸ்டாரின் மார்க்கெட்டை கண்டு மிரண்டு எம்ஜிஆரை பற்றிய தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பேசப்படுகிறது. அதுமட்டுமின்றி 1980ல் எம்ஜிஆருக்கு டஃப் கொடுத்த ரஜினி இப்பவும் உச்ச நட்சத்திரமாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.