ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் இருவரும் போயஸ்கார்டனில் வசித்து வந்ததால் இவர்களுக்குள் அடிக்கடி ஏதாவது மனஸ்தாபம் இருந்து வந்துள்ளது. ஆனால் ஜெயலலிதா ஒரு விஷயத்தில் ரஜினிக்கு ஆதரவாக பேசியதால், அவருக்கு உச்சி குளிர்ந்தது.
இந்தியத் திரையுலகில் இருக்கும் முக்கிய பிரபலங்கள் பலர் நடிப்பில், மணிரத்தினம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதனால் இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இணையத்தின் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.
இன்னிலையில் பொன்னியின் செல்வன் படத்தை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளிட்டோர் படத்தை எடுக்க முயற்சித்தாலும் அவர்களால் முடியவில்லை. பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ விழாவில் பேசும்போது ரஜினிகாந்தை பற்றி மணிரத்தினம் பேசினார்.
மும்பையில் இருக்கிற பெரிய பெரிய நடிகர்கள் கூட மணிரத்னத்தை பார்த்தால் எழுந்து நின்று மதிப்பார்க்கலாம். படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி கேரக்டர் பொன்னியின் செல்வன் படத்தில் வரும் நந்தினி கேரக்டரில் இன்ஸ்பிரேஷனாக மணிரத்தினம் சொல்லியிருக்கிறார்.
மேலும் மறைந்த நடிகை செல்வி ஜெ ஜெயலலிதா கூட ஒரு பேட்டியில் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனும் கதாபாத்திரத்தில் யாரு நடித்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்கு ஜெயலலிதா உடனடியாக ரஜினி நடித்தால் நல்லாயிருக்கும் என்று சொன்னாராம். இதை கேட்டதும் ரஜினிகாந்த் மிகவும் சந்தோசம் அடைந்ததாகவும் அவர் மற்றொரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இப்படி பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்காவிட்டாலும் ரஜினிகாந்தின் பெயர் அந்தப் படத்தை குறித்து பேசும்போது அடிபட்டதால் அவர் நிச்சயம் அந்த படத்தில் இருப்பார் என பலரும் நினைத்தனர். அவர் மட்டும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார் என்றால் இன்னும் சூப்பராக இருக்கும் என சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர்.