கொரோனாவால் பாதித்தவர்களுக்கு உதவும் அஜித் பட நடிகை.. இவங்க ரஜினி ஜோடியாச்சே!

இந்தியாவில் கொரோனா தோற்றால் பலரும் பதித்துள்ளனர். ஒருபக்கம் அரசாங்கம் முடிந்த அளவுக்கு மக்களுக்கு உதவி வரும் நிலையில் மற்றொரு பக்கம் பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

ஒருகாலத்தில் அவரவர் தங்களது வேலைகளில் கவனம் செலுத்தி வந்தனர். ஆனால் கொரோனா வந்த பிறகு ஒவ்வொருவரும் மற்றவருக்கு உதவி வருகின்றனர்.
உயிரை காப்பாற்றிய செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு தினம்தோறும் மக்கள் தங்களது மரியாதையை தெரிவித்துவரும் நிலையில் தற்போது பிரபலங்கள் தினம்தோறும் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மாஸான படம் “காலா”. இந்த திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்தவர் நடிகை “ஹூமா குரேஷி”. இந்தியில் சில படங்களில் நடித்துள்ள இவர் ஒரு சமூக சேவகியும் கூட. தற்போது அஜித்துடன் வலிமை படத்திலும் நடித்து வருகிறார்

huma urashi
huma urashi

புயல் வெள்ளம் என பல்வேறு இயற்கை பேரிடர்களுக்காக உதவும் நெஞ்சங்களில் ஹூமாவும் அடங்குவார். இவர் நிறத்தை போலவே மனசும் வெள்ளை தான் போல. இரண்டாம் அலை காலகட்டத்தில் இன்னொரு சமூக தொண்டு நிறுவனத்துடன் கைகோர்த்து டெல்லி நகரப்பகுதியில் சில மருத்துவமனைகளுக்கு படுக்கை வசதி ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்காக மெனக்கெட்டது அனைவரும் அறிந்ததே.

இப்போது மூண்றாம் அலை கொரனாவை எதிர்கொள்ள தயாராகும் இந்தியாவின் பல பகுதிகளுக்கு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். அதன்படி மருந்துவமனை வசதி ஆம்புலன்ஸ் வசதி படுக்கை வசதி என எவை எவற்றின் தட்டுப்பாடுகள் உள்ளனவோ அதனை சரிகட்டி. தற்போது லிஸ்ட் அவுட் தயாராகி வருகிறது.