Cinema : தமிழ் சினிமாவில் தற்போது நடிகைகள் இயக்குனர்கள் ஆவதும், இயக்குநர்களா நடடிகர்களா ஆவதும் சகஜமாகி விட்டது. தற்போது உள்ள தொழில்நுட்பாங்கள் மூலம் நிறைய விஷ்யங்களை நம் பெறவும் கற்றுக்கொள்ளவும் முடிகிறது. ஆனால் இயக்கம், நடிப்பு என்பது திறமை சம்பந்தப்பட்ட விஷயம்.
இவ்வாறு தமிழ் சினிமாவில் நிறைய நடிகர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரெனெ இயக்குனராக அவதாரம் எடுத்தார்களாம். அப்படி ஒருசில நடிகர்களுக்கு இயக்கமும் கை கொடுத்துள்ளது. சில நடிகர்களுக்கு இயக்கம் சரிக்கியும் விட்டதாம். அப்படி சில நடிகர்களை பார்க்கலாம்.
பிரகாஷ்ராஜ் : நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்கள் அவர் நடித்து கொண்டிருந்த காலகட்டத்தில் யாரும் சற்றும் எதிர்பார்க்காத பொது இயக்குனராக வாதம் எடுத்துள்ளார். இவர் இயக்கத்தில் தோணி (2012) மற்றும் உன் சமையல் அறையில் (2014) என இரண்டு படங்களையும் இயக்கியுள்ளார், இது நல்ல வரவேற்பையும் பெற்றுத்தந்துள்ளது.
ராஜ்கிரண் : நடிகர் ராஜ்கிரண் அவர்கள் அவர் பிரபலமாக இருந்த கலகட்டத்தில் இவரது இயக்கத்தில் அரண்மனை கிளி ( 1993) மற்றும் எல்லாமே என் ராசாதான் (1995) என்ற இரண்டு படமும் இவருக்கு நல்ல வெற்றியை தேடித்தந்தது.
ரஞ்சித் : நடிகர் ரஞ்சித் அவர்கள் குணசித்ர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவரும் திடிரென்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இவர் பீஷ்மர்(2003) மற்றும் நீண்ட நாட்களுக்கு பிறகு கவுண்டம்பாளையம் (2024) என்னும் படத்தை எடுத்து கடுமையான கேளிக்கும், கிண்டல்களுக்கும் ஆளாகிவிட்டார்.
விஜயகாந்த் : நடிகர் விஜயகாந்த் அவர்கள் என்றாலே அவர் நடிப்புக்கு இல்லாத ரசிகர்களே கிடையாது என்றே கூறலாம். இவர் இயக்குனராக அவதாரம் எடுத்தது என்பது முற்றிலும் யாரும் எதிர்பர்க்த்தை ஒன்று. இவர் இயக்குனராக இவரது கடைசி படமான “விருதகிரி” படத்தை இவரே நடித்து இயக்கினார்.
அருண்பாண்டியன் : நடிகர் அருண்பாண்டியன் அவர்கள் தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் நடிகர். இவர் “தேவன்”, “ஊமை விழிகள்” மற்றும் விகடன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
சரத்குமார் : நடிகர் சரத்குமார் அவர்கள் தனது இயக்கத்தில் இரண்டு படைகளை இயக்கியுள்ளார். “தலைமகன்” மற்றும் “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்” இந்த இரண்டு படமும் ஓரளவிற்கு வெற்றியை பெற்று தந்தது.
ரமேஷ் கண்ணா : நகைச்சுவை நடிகர் ரமேஷ் கண்ணா அவர்களும் “தொடரும்” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.
சத்யராஜ் : நடிகர் சத்யராஜ் அவர்களும் தமிழில் பிரபலமான நடிகர். இவரது நடிப்பு தனி ஸ்டைலில் இருக்கும் அனைவராலும் ஏறிக்கொள்ள மூடிய வகையில் இருக்கும் இன்றளவில் இருக்கிறது. இவர் “வில்லாதி வில்லன்” என்ற படத்தை இவரே இயக்கி நடித்தார். இதும் பெரும்பலம் வரவேற்பை பெற்றது.
இவ்வாறு அன்றிலிருந்து இன்றுவரை நடிகர்கள் இயக்குனராக ஆவதும். இயக்குனர்கள் நடிகர்களாக ஆவதும் தொன்றுதொட்டு வந்து கொண்டிருக்க கூடிய ஒரு விஷயமாக ஏற்கப்படுகிறது. ஆனால் ஜெய்த்தார்களா தோற்றுவிட்டார்களா என்பதே கேள்வி?