Vidaamuyarchi : விடாமுயற்சி படம் தொடங்கியதில் இருந்து ரிலீஸ் வரை அஜித் பல்வேறு விமர்சனங்களை சந்தித்திருக்கிறார். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் அவரது கதை லைக்காவிற்கும், அஜித்திற்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதன் பிறகு விடாமுயற்சி படத்தில் நுழைந்த இயக்குனர் தான் மகிழ் திருமேனி. கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேலாக இந்த படத்தை எடுத்து வந்தனர். எப்போது தான் இந்த படம் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் கேட்டு அழுத்து விட்டனர்.
ஒரு வழியாக இந்த ஆண்டு தொடக்கத்திலேயே படம் வெளியானது. ஆனால் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை தான் பெற்றது. மூன்று வருஷமாக இந்த கதையை தான் உருட்டி வந்தீர்களா என்று ட்ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
விடாமுயற்சி பார்த்து கால்சீட் கொடுத்த ஹீரோ
இதனால் விடாமுயற்சி படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது. அதோடு இந்த படத்தை தயாரித்த லைக்காவிற்கும் நஷ்டத்தை கொடுத்தது. இப்படி இருக்கும் சூழலில் ஓடிடியில் விடாமுயற்சி படத்தை விஜய் சேதுபதி பார்த்திருக்கிறார்.
உடனடியாகவே மகிழ் திருமேனிக்கு ஃபோன் செய்து அடுத்த படம் நம்ம பண்றோம் என்று கூறியிருக்கிறார். அதற்கான ஸ்கிரிப்டையும் தயார் செய்ய சொல்லி இருக்கிறாராம். விடாமுயற்சி படத்திற்கு பிறகு மகிழ் திருமேனிக்கு வாய்ப்பு இல்லாமல் இருந்தது.
இப்போது விஜய் சேதுபதி வாய்ப்பு கிடைத்ததால் உடனடியாக கதையை எழுதும் வேலையில் இறங்கி இருக்கிறாராம். விஜய் சேதுபதி ரசிகர்கள் ஏற்கனவே விடாமுயற்சி பிளாப் ஆகிவிட்டது, தெரிந்தே விஜய் சேதுபதி குழியில் விழுகிறாரா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.