2025ல் வில்லனாக மாறிய ஹீரோக்கள்.. ரவி மோகன் கொடுத்த ஷாக்

Cinema : சினிமாவில் இப்போது ஹீரோ வாப்பை விட வில்லனுக்கு தான் அதிக மதிப்பு கொடுக்கின்றனர். 2025-இல் ஹீரோவாக நடிச்சுட்டு இப்போது வில்லனாக மாறிய 5 நடிகர்கள் யார் யாரென்று இப்பகுதியில் பார்க்கலாம்.

ஹாரிஸ் கல்யாண்..

தனிமையின் முகம் என்ற திரைப்படம் இந்த வருடம் நவம்பர் மாதம் வெளியாக உள்ளது. மென்மையான ஒரு ஹீரோவாக வலம் வந்த ஹாரிஸ் கல்யாண், இந்தத் திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட வருடமாக நடித்திருக்கிறார். ஹீரோவாக வளம் வந்த ஒருவர் தற்போது சைக்கோ வில்லனாக நடித்திருப்பது அனைவருக்கும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

ரவி மோகன்..

சிவகார்த்திகேயன் நடித்த இன்னும் திரைக்கு வராத படம் இது. படம் வெளிவருவதற்கு முன்பே ஃபர்ஸ்ட் லுக், போஸ்டர்ஸ் என பயங்கரமாக வலைத்தளத்தில் பராசக்தி படத்தின் அப்டேட் வந்து கொண்டிருக்கிறது. ரவி மோகன் ஆதிகாலத்தில் இருந்து இப்போது வரைக்கும் ஹீரோவாகத்தான் பார்த்திருப்போம். ஆனால் பராசக்தி திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் வில்லன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கிறார்.

SJ சூர்யா..

வழக்கமாக எஸ் ஜே சூர்யா திரைப்படம் என்றாலே மக்களிடம் எதிர்பார்த்து இருக்கும். அந்த வகையில் தற்போது கடமை செய்-2 படம் இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தில் முற்றிலும் எஸ் ஜே சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கூலி..

தலைவர் சூப்பர் ஸ்டாரின் கூலி திரைப்படம் அனைவராலும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படமாகும். நிச்சயம் இந்த வருடம் டாப் லிஸ்டில் இருக்கப் போகிறது என்பது உறுதி. சினிமா வாழ்க்கையில் ஹீரோவாக மட்டுமே நடித்த வந்த அமீர்கான் தற்போது கூலி திரைப்படத்தில் வில்லனாக மாறியிருப்பது, ரசிகர்களின் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது.

டெஸ்ட்..

ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை வைத்து வெளியான திரைப்படம் வசூலில் அள்ளியது. நயன்தாரா கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் யாரும் எதிர்பாராத விதத்தில் மாதவன் கதாபாத்திரம் வில்லனாக சித்தரிக்கப்பட்டிருந்தது.