நமக்கு இது செட் ஆகிவிட்டது, இதுதான் நமது ஃபியூச்சர் என்று பல பேர் செய்வதறியாமல் வெவ்வேறு இடத்தில் ஒட்டிக் கொள்வார்கள். அப்படி அந்த இடத்தில் வெற்றி பெற்று நிலைத்தவர்களை காட்டிலும் பழைய இடத்துக்கே சென்றவர்கள் தான் அதிகம். அப்படி சினிமாவில் இடம் மாறி சென்ற 4 பேர் பற்றிய செய்தி தொகுப்பு.
விஜய் ஆண்டனி: நல்ல ஒரு மியூசிக் டைரக்டர். இவர் இசையமைப்பதை விட்டுவிட்டு தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிப்பதை கையில் எடுத்தார். இசையால் ஜெயித்ததை காட்டிலும் நடிப்பில் சற்று குறைந்துவிட்டார். ஆரம்பத்தில் பிச்சைக்காரன், நான் போன்ற வெற்றி படங்கள் கொடுத்தார். ஆனால் இப்பொழுது நிலைத்து நிற்க முடியவில்லை. மீண்டும் இசைப்பக்கம் போகிறார்.
ஹிப் ஹாப் ஆதி: இசையால் தான் இவர் ஆரம்பத்தில் பெயர் எடுத்து சினிமாவில் வெற்றி பெற்றார். ஆனால் அதன் பிறகு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். 10 படங்களுக்கு மேல் நடிக்கும் இவருக்கு எந்த ஒரு படமும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. இப்பொழுது நடிப்பதில்லை என முடிவெடுத்துவிட்டார்.
சசிகுமார்: இயக்குனராக பல வெற்றி படங்கள் கொடுத்த இவர் நடிகராக சோபிக்க முடியவில்லை. இவர் இயக்கி நடித்த படங்கள் வெற்றி பெற்றாலும், மற்ற இயக்குனர்கள் படத்தில் நடித்தது இவருக்கு கை கொடுக்கவில்லை. இவரும் மீண்டும் இயக்கத்துக்கு திரும்புகிறார்.
மிஷ்கின்: பல படங்களில் ஹீரோ மற்றும் கௌரவ தோற்றத்தில் நடித்து அசத்தியவர் இவர். ஆனால் இன்றுவரை இவருக்கு ஒரு பெயர் கிடைக்கவில்லை. இதனால் இவர் மீண்டும் இயக்குவதில் முழு கவனம் செலுத்தப் போகிறாராம். நடிப்புக்கு சற்று ஓய்வு கொடுக்கவிருக்கிறார்
எஸ் ஜே சூர்யா: முற்றிலுமாக இயக்குவதை நிறுத்திவிட்டார் தற்போது இவர் காட்டில் அடை மழை பெய்து வருகிறது. கைவசம் ஏழு, எட்டு படங்கள் வைத்திருக்கிறார் சம்பளமும் இயக்குவதைத் தாண்டி நடிப்பதில் அதிகம் வாங்கி வருகிறார். இவர் ஒருவரே ப்ரொபஷனல் மாற்றி ஜெயித்துள்ளார்.