Vijay and Ajith Actress: தற்போது விஜய், அஜித் இருவரும் போட்டி போட்டு கொண்டு ரசிகர்களை அதிக அளவில் சம்பாதித்து முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் சினிமாவிற்கு நுழைந்த காலத்தில் நடித்த படங்களில் இவர்களுடைய முக பாவனை மற்றும் அழகும் அத்தனை பேரு மனதையும் ஈர்த்தது.
அத்துடன் இவர்களுடைய படங்களுக்கு இன்னும் மிகச் சிறப்பாக அமைந்தது இவர்களுக்கு ஹீரோயினாக நடித்த நடிகைகள் தான். அதில் முக்கியமாக ஒரு ஹீரோயின் அவ்வளவு கொள்ளை அழகு, கொழு கொழுவென்று கண்ணம், வெள்ளந்தியான சிரிப்பு, ஹோம்லி லுக் இத்தனையும் மொத்தமாக வைத்து அனைவரையும் கவர்ந்தவர்.
இவர் நடித்த முதல் படமே சூப்பர் ஹிட் படமாக ஆனது. அதன் பின் தமிழ் சினிமாவில் ஹோம்லி கதாபாத்திரம் என்றால் இந்த ஹீரோயினை தான் அனைவரும் தேடுவார்கள். அத்துடன் இவர் நடித்தால் அந்தப் படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என்று இயக்குனர்கள் லக்கியாகவே உணர்ந்தார்கள்.
அப்படிப்பட்ட இந்த நடிகை விஜய், அஜித் இரண்டு பேருக்கும் ஜோடி போட்டு நடித்து சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார். அந்த நடிகை வேறு யாரும் இல்லை அஜித் சாக்லேட் பாயாக வந்து அனைவரும் ஈர்த்த ஆசை படத்தில் நடித்த ஹீரோயின் சுவலட்சுமி தான். இப்படத்தில் இவருடைய ஸ்மார்ட்டான தோற்றத்தாலே அஜித் இவரை தேடித்தேடி காதலிப்பார்.
மேலும் இந்த படத்திற்கு பிறகு சுவலட்சுமிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தார்கள். அஜித்துக்கு எப்படி ஆசை படம் அமைந்ததோ, அதேபோல் விஜய்க்கும் காதல் சரித்திர படமாக அமைந்தது லவ் டுடே. இப்படத்தில் ஒரு அம்சமான முகபாவனை வைத்து காதலே வேண்டாம் என்று இருந்த நடிகையை துரத்தி துரத்தி காதலிப்பார் விஜய்.
அப்படிப்பட்ட லக்கி நடிகையாக இருந்துவிட்டு கொஞ்ச வருடங்களுக்குப் பிறகு சற்று குண்டானதால் இவருக்கு பட வாய்ப்புகள் வராமல் போய்விட்டது. அதனாலயே நடிப்பை நிறுத்தி விட்டார். ஆனால் தற்போது வரை இவர் எங்கே இருக்கிறார் என்ன பண்ணுகிறார் என்று ஆள் அட்ரஸே தெரியாமல் போய்விட்டார். இந்த மாதிரி நடிகை எல்லாம் திரும்ப பார்க்க மாட்டோமா என்று 90 கிட்ஸ் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.