தல அஜித்தின் ரீல் மகளாக தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான குழந்தை நட்சத்திரம் அனிகா சுரேந்திரன், அதன்பிறகு தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து, தான் ஹீரோயினாக நடிக்க ரெடி என்று சொல்லாமல் சொல்லி வந்தார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்தது. இந்நிலையில் தெலுங்கில் ‘புட்டபொம்மா’ என்ற படத்தில் அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக ஆக நடிக்கவுள்ளதாகவும், அந்தப் படத்திற்கான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை தற்போது அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
இந்தப் படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சிதாரா என்டர்டைன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அனிகா சுரேந்திரன் உடன் இணைந்து நடிக்கும் பிரபலங்கள் யார் யார் என்ற தகவலும் மற்றும் புட்டபொம்மா படத்தின் முழுவிபரம் விரைவில் வெளியாகும்.
புட்டபொம்மா படத்தில் அனிகாவின் ஃபர்ஸ்ட்லுக்!

இருப்பினும் அனிகா சுரேந்திரனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஹீரோயின் லுக்கில் தோன்றி ரசிகர்களிடம் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகப்படுத்தி இருக்கிறார். ஏற்கனவே அனிகா சுரேந்திரன் ‘மா’ என்ற குறும்படத்தில் வயதுக்கு வந்த சிறுமி கர்ப்பிணி ஆகுவது போன்றும், அதை அறிந்து கொள்ளும் தாய் அந்த சிசுவை கலைத்து விடுவது போன்றும் இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஷாக் ஆகிறார்.
அதன்பிறகு, தளபதி விஜயின் மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ அடுத்ததாக இயக்குனர் மணி நாகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ என்ற படத்திலும் அனிகா இளம் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
லேடிஸ் சூப்பர் ஸ்டாரை மிஞ்சும் குட்டி நயன்தாரா அனிகா!

திருமணத்திற்கு பிறகு நயன்தாரா விட்டு செல்லும் இடத்தை குட்டி நயன்தாராவான அனிகா சுரேந்தர் பிடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதிலும் இவரின் புட்டபொம்மா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த பிறகு, அவர் இப்போது இருக்கும் நடிகைகளுக்கு பயங்கரமான டஃப் கொடுப்பார் என ஹீரோயின்கள் பதறிப்போய் இருக்கின்றனர்.