கல்யாணத்துக்கு பிறகும் நயன்தாரா போல் கொடி கட்டி பறக்கும் ஹீரோயின்.. சூர்யாவுக்கே நோ ரெஸ்பான்ஸ்

நயன்தாரா கல்யாணமாகி மூன்று ஆண்டுகள் ஆன போதிலும் கூட இன்றுவரை மார்க்கெட்டில் கொடி கட்டி பறந்து வருகிறார். கல்யாணமான பிறகு பெரும்பாலான நடிகைகள் குடும்பம் குழந்தைகள் என சினிமாவை தவிர்த்து விடுவார்கள். அவர்கள் மத்தியில் இன்று நயன்தாரா போன்ற நடிகைகள் தொடர்ந்து நடித்து வருகிறார்கள்.

நடிப்பது மட்டுமில்லாமல் ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு படத்திற்கும் 12 முதல் 15 கோடிகள் வரை சம்பளம் வாங்குகிறார். இவர் நடித்த படங்கள் சரியாக போகாவிட்டாலும் கூட சம்பளத்தை மட்டும் குறைத்துக் கொள்வதே இல்லை.

இப்படி நயன்தாரா போல் தொடர்ந்து கல்யாணத்துக்கு பிறகும் நடிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் கைவசமும் ஐந்தாறு படங்கள் வைத்திருக்கிறாராம். சம்பளமும் ஐந்து கோடிகள் வரை வாங்குகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது பள்ளி தோழனான காதலரை கரம் பிடித்தார் கீர்த்தி சுரேஷ்.

கல்யாணத்திற்கு முன்பு இவரது நடிப்பில் ரகு தாத்தா படம் வெளியானது. அந்த படமும் சரியாக போகவில்லை இருந்தும் கூட இன்று வரை இவர் மார்க்கெட் டல் அடிக்க வில்லை. அடுத்தடுத்து தெலுங்கு, ஹிந்தி என கைவசம் நான்கு ஐந்து படங்கள் வைத்திருக்கிறார். தமிழிலும் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கிறது.

சமீபத்தில் கூட, வெங்கி அட்லூரி மற்றும் சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் படத்திற்கு கீர்த்தி சுரேஷ் தான் ஆரம்பத்தில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவரது கால் சீட் மிகவும் பிசியாக இருப்பதால் இந்த படத்திற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். விஜய் தேவர் கொண்டா நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.