ஒரு நாளைக்கு 4 லட்சம் சம்பளம், ஆனா வாடகை வீட்டில் வசிக்கும் நடிகை.. உடன்பிறப்பே உலை வைத்த கொடுமை

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி புகழ் பெற முடியாமல் மலையாள சினிமாவில் அந்தரங்க படங்களின் மூலம் நடித்து புகழ்பெற்ற நடிகை ஒருவர், ஒரு நாளைக்கு4 லட்சம் சம்பளம் வாங்கியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் அப்போது சம்பாதித்த பணத்தை எல்லாம் உடன் பிறப்பே சுருட்டி கொண்ட கொடுமையும் நிகழ்ந்திருக்கிறது.

90களில் இவர் நடித்த கவர்ச்சி படங்கள் கேரளாவில் சக்கை போடு போட்டது. இவர் படங்களுடன் மம்முட்டி, மோகன்லால் போன்ற மலையாள டாப் நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனால் தோற்றுவிடும் என்று தயாரிப்பாளர்களை ஷகிலா படத்துடன் ரிலீஸ் செய்யாமல் ஒதுங்கிய சம்பவம் எல்லாம் அரங்கேறின.

இதை அடுத்து கேரளாவில் அவர் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதால் தமிழகத்திற்கு வந்து செட்டில் ஆகிவிட்டார். இத்தனை வருடங்களாக சம்பாதித்த பணத்தை வைத்து நிம்மதியாக வாழ்ந்து விடலாம் என எண்ணிய ஷகிலாவிற்கு அவருடைய உடன்பிறப்பே உலை வைத்துவிட்டார்.

இவருக்கு தற்பொழுது சொந்த வீடு இல்லை, கார் இல்லை எதுவும் இல்லாமல் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். காரணம் இவர் ஏமாற்றப்பட்டது தான். இவர் நன்றாக இருந்த காலத்தில் ஒரு நாளைக்கு 4 லட்சம் சம்பளமாக கொடுத்துள்ளார்கள். அந்த அளவுக்கு பெரிய நடிகையாக இருந்தார்.

இந்த பணத்தை எல்லாம் வீட்டில் வைத்திருந்தால் பிரச்சனை வரும் என அவர் தங்கை, ‘நான் பத்திரமாக வைத்துக் கொள்கிறேன்’ என்று வாங்கிவிட்டு சென்றுவிட்டாராம். அதன்பின் தான் ஷகிலாவை அவருடைய தங்கை ஏமாற்றி, பணத்தை எல்லாம் வாங்கிவிட்டு சென்றுவிட்டார் என்பது தெரியவந்தது. இதைப் பற்றி வெளியில் எதுவும் சொல்ல முடியாமல் ஷகிலா வருத்தப்பட்டு அதை விட்டுவிட்டார்.

மறுபடியும் ஷகிலா ஜீரோவிலிருந்து தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி, டிவி ஷோக்கலில் ஆங்கரிங் பண்ணுவது, யூடியூப் சேனல் நடத்துவது என தற்போது மீண்டும் முன்னேறி வருகிறார். இவர் திருநங்கை மிளா என்பவரை தத்தெடுத்து வளர்த்தும் வருகிறார். இவர் பேஷன் டிசைனர் ஆக பணிபுரிகிறார்.