தொடர்ந்து அடிவாங்கும் பாலிவுட் ஹீரோக்கள்..

இந்திய திரையுலகில் ஷங்கர் மற்றும் ராஜமௌலி இயக்கத்தில் 200, 300 கோடிகளில் படங்களை பிரம்மாண்டமாக எடுத்து வழக்கமாக பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடுவார்கள். இப்போது அவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு தற்போது 410 கோடியில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் தான் பிரம்மாஸ்திரம்.

சுமார் 5 வருட காலமாக அயன் முகர்ஜி இயக்கத்தில், ராஜமௌலியின் தயாரிப்பில் எடுத்திருக்கும் இந்த படம் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி ரிலீசாகிறது. கேஜிஎஃப், விக்ரம் படங்களில் விதவிதமான துப்பாக்கிகளை வைத்து ஹீரோக்கள் வித்தை காட்டியது போல இந்தப் படத்தில் இடிகாச அஸ்திரங்களையே கையில் ஏந்தி கதாநாயகன் ரன்பீர் கபூர் மிரட்டி உள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரல் ஆனது. இந்த படத்தில் ரன்பீர் கபூருடன் அமிதாப் பச்சன், நாகார்ஜுனா, ஆலியா பட் மற்றும் மெளனி ராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் மற்றும் நடிகர் ஷாருக்கான் கேமியோவாகவும் நடித்துள்ளார்.

இப்படி ஒட்டு மொத்த ஹிந்தி முன்னணி பிரபலங்களும் ஒரே படத்தில் இணைந்து பாலிவுட்டின் மந்த நிலையை மீட்டெடுக்க போகின்றனர். ஏனென்றால் 2022 ஆம் ஆண்டில் வெளியான படங்களில் தென்னிந்திய படங்கள் தான் பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூலைக் குவித்திருக்கிறது.

ஆனால் இதற்கு முன்பு பாலிவுட் படங்கள், வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் வெளியான படங்களின் வசூல் சுமார் 2300 கோடியை தாண்டும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா உள்ளிட்ட காரணங்களால் அதைப் பெற முடியவில்லை. இருப்பினும் கொரோனா பாதிப்பு இந்த ஆண்டின் துவக்கத்திலும் இருந்த போதுகூட வெளியான தென்னிந்திய திரைப்படங்கள் பாலிவுட் படங்களை காட்டிலும் அதிக வசூலைக் குவித்திருக்கிறது.

ஆனால் பாலிவுட்டில் சூப்பர்ஸ்டார் அக்ஷய்குமார் நடிப்பில் வெளியான ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம், ஆலியா பட் நடிப்பில் வெளியான கங்குபாய் கத்தியவாடி படம் என பாலிவுட்டில் முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்தும் படுதோல்வியை சந்தித்து கொண்டிருப்பதால், விட்ட இடத்தை பிடிப்பதற்காக பிரம்மாஸ்திரம் திரைப்படத்தை வைத்து சர்வதேச அளவில் வசூலை தட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர்.