அஜித் படமா வேண்டாம் என தெறித்து ஓடிய முன்னணி நடிகர்கள்.. இது என்னடா தூக்குதுரைக்கு வந்த சோதனை!

தமிழில் வெளியாகி அதிரடி வெற்றி பெற்ற விக்ரம் வேதா, கைதி, மாஸ்டர், இறுதிச்சுற்று, மாநகரம் உள்ளிட்ட பல படங்கள் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. அதுமட்டும் இன்றி பல பாலிவுட் நடிகர்கள் தமிழ் படங்களின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் அப்பா மகள் பாசத்தை மையமாக வைத்து இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் விஸ்வாசம் படம். தமிழில் நல்ல வெற்றியை பெற்ற நிலையில் இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் பணிகள் நடந்து வந்தது.

முன்னதாக விஸ்வாசம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக கூறப்பட்ட அக்ஷய் குமார் மற்றும் அஜய்தேவ்கன் ஆகிய இருவரும் தற்போது இந்த படத்தில் ஓவர் சென்டிமென்ட் காட்சிகள் இருப்பதாக கூறி நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் பாலிவுட் ரசிகர்களுக்கு இந்த கதை செட்டாகாது எங்கள் ரசிகர்களுக்கு ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தை தான் விரும்புவார்கள். அதுமட்டுமின்றி எங்களுக்கும் சென்டிமென்ட் வராது அதனால் இந்த கதை தங்களுக்கு செட்டாகாது என கூறி திட்டவட்டமாக மறுத்து விட்டார்களாம். இதனால் வேறு நடிகர்களிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.

தமிழ் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கவே தயங்கும் இந்த நடிகர்களுக்கு மத்தியில் நேரடி தமிழ் படத்தில் வில்லனாக நடித்து பட்டையை கிளப்பிய பாலிவுட் நடிகர்களும் உள்ளனர். உதாரணமாக பேட்ட படத்தில் வில்லனாக மிரட்டிய நவாசுதீன் சுதீப், காப்பான் படத்தில் நடித்த போமன் இரானி, ஆரண்ய காண்டம் படத்தில் நடித்த ஜாக்கி ஷெராஃப், கத்தி படத்தின் நீல் நிதின் முகேஷ், தளபதி படத்தின் அம்ரிஷ் புரி ஆகியோர் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் பிரபல பாலிவுட் நடிகர்கள். ஆனால் தமிழ் படங்களில் வில்லனாக நடித்து மிரட்டியுள்ளனர். இப்படி உள்ள நிலையில் ஒரு சூப்பர் ஹிட் படமான விஸ்வாசம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பாலிவுட் நடிகர்கள் நடிக்க மறுத்திருப்பது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.