Collie : கூலி படம் வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சுதந்திர தினம் மற்றும் சனி, ஞாயிறு விடுமுறையை கருத்தில் கொண்டு இந்த படத்தை வெளியிட முடிவு செய்து இருக்கிறார்கள். மேலும் நேற்று புக்கிங் தொடங்கிய நிலையில் சில மணி நேரங்களிலேயே எல்லா டிக்கெட்டுகளும் விற்று விட்டதாம்.
அந்த அளவுக்கு கூலி படத்திற்கான எதிர்பார்ப்பு பிரம்மாண்டமாக இருக்கிறது. மற்றொருபுறம் ரஜினியின் ரசிகர் பட்டாளம் கூலி படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆகையால் இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
அதற்கேற்றார் போல் சில தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகஸ்ட் 14ஆம் தேதி விடுமுறை அளித்து இருக்கின்றனராம். அதாவது தீபாவளி பண்டிகை போல் கூலி ரிலீஸை கொண்டாட இருக்கின்றனர்.
கூலி ரிலீஸுக்காக விடுமுறையை அறிவித்த நிறுவனங்கள்
ஏற்கனவே இதே போல் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகும் படங்களுக்கு சில ஐடி நிறுவனங்கள் விடுமுறை கொடுத்துள்ளது. அதேபோல் கூலி படத்திற்கும் தற்போது விடுமுறை கொடுத்ததால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
அதோடு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறையாக அவர்களுக்கு கிடைக்கிறது. இதன் மூலம் கூலி படத்தின் வசூல் பெரிய லாபத்தை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக அமெரிக்காவில் முன்பதிவு அமோகமாக இருந்துள்ளது.
மேலும் சில கார்ப்பரேட் திரையரங்குகளில் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் காட்சி தொடங்க இருக்கிறது. எனவே ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற ரசிகர்களும் கூலி படத்திற்காக காத்து இருக்கின்றனர்.