கமலிடமிருந்து தப்பியது எப்படி.? வசமா சிக்கிய லிங்குசாமி., உண்மையை புட்டு புட்டு வைத்த தயாரிப்பாளர்

சினிமாவை எப்போதுமே கொஞ்சம் வித்தியாசமாக பார்க்கக் கூடியவர் உலக நாயகன் கமலஹாசன். இவருடைய நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான உத்தம வில்லன் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் பிளாப் ஆனது. ஆனால் இந்த படத்தை முதலில் தயாரிக்க இருந்த பிரபல தயாரிப்பாளர் கமலிடம் இருந்து எப்படி தப்பித்தார்.

அதன் பிறகு லிங்குசாமி அதில் எப்படி வசமாக சிக்கினார் என்ற உண்மையை சமீபத்திய பேட்டி ஒன்றில் புட்டு புட்டு வைத்திருக்கிறார். முதலில் இந்த படத்தை தயாரிக்கும் பொறுப்பை கமல், தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் தான் கொடுத்திருக்கிறார். இந்த படத்தின் கதையைக் கேட்ட பிறகு அவர், அன்பே சிவம் படத்தின் இரண்டாம் பாகம் போல் இருக்கும்.

இந்த படத்திற்கு கமர்ஷியல் ரீதியாக வெற்றி கிடைக்காது. மிஞ்சி போனால் தியேட்டரில் 10 கோடி மட்டுமே வசூலிக்கும் என்று கமலிடம் உடைத்து பேசினார். இப்படி தனஞ்செயன் வெளிப்படையாக பேசியது கமலுக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை. அத்துடன் 60 கோடி பட்ஜெட்டில் உத்தம வில்லன் படத்தை எடுக்கும்படி கமல் சொல்லி இருக்கிறார்.

உடனே அதையும் மறுத்து பேசிய தனஞ்செயன் 35 கோடிக்கு மட்டுமே பண்ண முடியும் என்று சொல்லி கிளம்பி விட்டார். அதன் பிறகு தான் கமலஹாசன் லிங்குசாமியை தேர்வு செய்து அந்த படத்தை தயாரிக்க சொன்னார். லிங்குசாமியும் தனஞ்செயன் இருக்கிற ஒரே நம்பிக்கையில் தான் அதற்கு ஒத்துக்கொண்டார்.

ஆனால் கடைசியில் இந்த விஷயத்தை தனஞ்செயன் இடம் லிங்குசாமி சொன்ன போது உத்தம வில்லன் படத்தினை நிச்சயம் இவ்வளவு கோடி செலவழித்து எடுக்க முடியாது என ஸ்டிட் ஆக சொல்லிவிட்டாராம். இருப்பினும் லிங்குசாமிக்கு கமலஹாசனின் படத்தை கைவிடக் கூடாது என்ற ஒரே காரணத்தினால் கடன் வாங்கி அந்த படத்தை எடுத்து முடித்தார்.

கடைசியில் போட்ட காசை கூட எடுக்க முடியாமல் லிங்குசாமி கடனாளியாக மாறியது தான் மிச்சம். அதன் பின் கமலஹாசன் மறுபடியும் ஏதாவது ஒரு படத்துடன் தன்னுடன் பணியாற்றி நஷ்டத்தை சரி செய்து விடுவார் என்று, இன்றுவரை லிங்குசாமி அதை பற்றி வாய் திறக்காமல் அமைதி காக்கிறார் என தனஞ்செயன் சமீபத்திய பேட்டியில், உத்தம வில்லன் படத்தில் எப்படி லிங்குசாமி சிக்கினார் என்பதை உடைத்து கூறினார்.