ஒன்னு ரெண்டு இல்ல, மொத்தம் 3 வாட்டி விஜய்யின் கடைசிப் பட வாய்ப்பு மிஸ் செய்த வாயாடி இயக்குனர்

விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார் என ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும், அவர் விஜய்69 படத்துக்குப் பின் இனிமேல் படங்களில் நடிக்க மாட்டாரா என ரசிகர்கள் ஒருபுறம் சோகமடைந்துள்ளார். ஏனென்றால் தமிழ் நாட்டில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். ஒருவேலை நெட்டிவ் ரிவியூ அவரது படத்துக்கு வந்தாலும் கூட கூட்டம் அதிகரிக்குமே தவிர குறையாது சினிமா விமர்சகர்களே கூறியுள்ளனர்.

அப்படியிருக்க, விஜய்யின் கடைசிப் படத்தைப் பற்றிய பேச்சுதான் கோலிவுட்டிலும் ரசிகர்கள் மத்தியிலும் பேசுபொருளாக உள்ளது. அதன்படி, விஜய்69 படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து அனிமல், கங்குவா பட புகழ் பாபி தியோஇல், பூஹா ஹெக்டே, பிரகாஷ்ராஜ் மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்க, கேவிஎன் புரடக்சன்ஸ் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறது.

விஜய்69 பட வாய்ப்பு மிஸ் ஆனது பற்றி ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்

இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு, ஒரு பாடல் காட்சியும் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகிறது. இந்த நிலையில் விஜயின் கடைசிப் படத்தின் இயக்குனராக ஹெச்.வினோத்தை செலக்ட் செய்யும் முன் பல இயக்குனர்களை அழைத்து கதை கேட்டிருக்கிறார் என ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது; ”நான் விஜய் சாரை 3 முறை சந்தித்து கதை கூறினேன். அப்படத்தின் பட்ஜெட் ரொம்ப பெரிது என்பதால், விஜய் சாருக்கு அக்கதை பிடித்திருந்தாலும் கூட அதன் பட்ஜெட் காரணமாக அதில் நடிக்கவில்லை.

அடுத்து, விஜய்69 படத்திற்காக ஒருமுறை சந்தித்தேன். அந்த கதையும் விஜர் சாருக்கு பிடித்திருந்தது. ஆனால் அவரை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. விஜய் சாரின் கடைசிப் படமாக இல்லாமல் இருந்தால் நிச்சயம் ஒரு படத்தை விஜய் சாரை வைத்து இயக்கியிருப்பேன். ஒரு பெரிய ஹீரோ என்னை அழைத்து கதை கேட்டது முதன் முதலில் விஜய் சார் தான். அவருக்கு நான் கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

விஜய் சாரின் கடைசிப்படத்துக்காக நான், ஹெச்.வினோத், இன்னும் சில முன்னணி இயக்குனர்களிடமும் விஜய் கதை கேட்டிருக்கிறார். ஆனால் அத்தனை பேரிடம் கதை கேட்டதில் ஹெச்.வினோத் கதை பிடித்திருந்தால் அவரை செலக்ட் செய்திருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், விஜய்69 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், மற்றொரு முன்னணி நடிகர் சுருயாவை வைத்து சூர்யா45 படத்தை இயக்கி வருவதற்காக அவரை பாராட்டி வருகின்றனர். இப்படத்தில் ஹிட் கொடுத்தால் ஒருவேளை விஜய் அரசியலில் இருந்தபடியே, அடுத்த படத்தில் நடிப்பதாக மனம் மாறினால் கூட நடிக்க வாய்ப்புள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Comment