மிருதன், டெடி போன்ற வித்தியாசமான படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்த சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கேப்டன். இப்படத்தில் ஆர்யா, சிம்ரன், காவியா செட்டி, பரத்வாஜ், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படம் ஏலியன் சர்வைவல் திரில்லர் படமாக உருவாகியிருந்தது. இப்படத்தில் ஆர்யா கேப்டன் வெற்றிச்செல்வனாக நடித்திருந்தார். எப்பேர்பட்ட எதிரியாக இருந்தாலும் அவர்களை முறியடித்து விடும் ஆர்யாவின் டீம். இதனால் இவர்களுக்கு ஒரு பெரிய டாஸ்க் கொடுக்கப்படுகிறது.
ஒரு காட்டுக்குள் போனவர்கள் யாரும் திரும்பி வருவதில்லை. அப்படியே அங்கு என்னதான் நடக்கிறது என்பதை கண்டறிவதற்காக ஆர்யா டீம் செல்கிறது. அந்த இடத்தில் ஒரு வகையான பிரிடேட்ரிடம் சிக்கிய நிலையில் அவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதை இப்படத்தின் கதை.
இப்படத்தில் பிளஸ் பாயிண்ட் என்னவென்றால் ஆர்யாவின் நடிப்பு அபரிவிதமாக இருந்தது. மேலும் தமிழில் இது போன்று பிரிரேடட்டர் படங்கள் இதுவரை வரவில்லை, அதற்காக இப்படத்தை ரசிகர்கள் பார்க்கலாம். மேலும் ஐஸ்வர்யா லட்சுமி சில காட்சிகள் மட்டுமே நடித்திருந்தாலும் அற்புதமாக நடித்திருந்தார்.
சமீபகாலமாக சிம்ரன் நெகடிவ் கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில் இந்த படத்திலும் அவருக்கு நெகடிவ் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. படத்திற்கு மைனஸ் பாயிண்ட் திரைக்கதை மற்றும் இயக்கம். மற்ற படங்களை காட்டிலும் இதில் சக்தி சௌந்தர்ராஜன் கேப்டன் படத்தில் கோட்டை விட்டுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் ரசிகர்கள் எக்சைட்மென்ட் செய்யும் அளவிற்கு படத்தில் எதுவும் இடம்பெறவில்லை. 1987இல் வெளிவந்த பிரிடேட்டர் படத்தில் இருந்த சுவாரசியம் கூட இப்படத்தில் இல்லை என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். மேலும் கேப்டன் படம் ரசிகர்களை ஏமாற்றி உள்ளது.