ருத்ர தாண்டவம் ஆடிய தனுஷ்.. குபேரா டீசர் எப்படி இருக்கு?

Kubera Teaser : தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் குபேரா படம் வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் வில்லனாக நாகார்ஜுனா மிரட்டி உள்ளார்.

தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கி இருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற போய் வா நண்பா என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

இன்று படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. அதில் தனுஷின் கெட்டப்புகள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சில காட்சிகளில் வேட்டி சட்டையிலும், சில காட்சிகளில் தாடியுடன் பரதேசி கோலத்திலும் இருக்கிறார்.

தனுஷின் குபேரா டீசர் எப்படி இருக்கு

நாகர்ஜுனாவும் படத்தில் முக்கிய பங்களித்துள்ளார் என்பது டீசரில் தெரிகிறது. அதோடு இது மற்றொரு பாடல் போல தான் வெளியாகி இருக்கிறது. அதுவும் தனுஷின் குரலில் தூய தமிழில் எழுதப்பட்ட வரிகளாக அமைந்திருக்கிறது.

அதற்கு தேவி ஸ்ரீ பிரசாந்தின் பின்னணி இசை பக்கபலமாக அமைந்துள்ளது. தனுஷ் ராயன் படம் மூலம் ஒரு நல்ல கம்பேக் கொடுத்திருந்தார். இப்போது குபேரா படமும் அவருக்கு பெயரை வாங்கிக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தெலுங்கில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படம் மண்ணை கவ்விய நிலையில் குபேரா படத்தின் மூலம் பதிலடி கொடுக்க இருக்கிறார். அதோடு தனுஷின் இட்லி கடை படமும் விரைவில் வெளியாக இருக்கிறார்கள்.