அஜித்தை பொறுத்தவரையில் தனக்கு ஒரு ஹிட் படம் கொடுத்தால் அவருடனே தொடர்ந்து பணியாற்றுவதை வழக்கமாக வைத்திருப்பார். அந்த வகையில் தான் சிறுத்தை சிவா உடன் சில காலம் அஜித் பயணித்து வந்தார். அதன் பிறகு எச் வினோத்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் கூட்டணி போட்டார்.
இந்த படத்தை போனிகாபூர் தயாரித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்ததால் இதே கூட்டணியில் வலிமை படம் உருவானது. ஆனால் வலிமை படம் வெளியான சமயத்தில் நெகட்டிவ் விமர்சனங்கள் நிறைய வந்தது. இதனால் வினோத் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் இது குறித்த வினோத் பேசியுள்ளார். வலிமை படத்திற்கு கிடைத்த மோசமான விமர்சனங்களால் இனிமேல் பெரிய நடிகர்களின் படத்தை இயக்கக் கூடாது என்று முடிவெடுத்தேன். அதாவது படத்தை ரிவ்யூ செய்கிறேன் என்ற பெயரில் அரிவாளை எடுத்து வெட்டுவது போல் ரிவ்யூ செய்தார்கள்.
அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால் அஜித்திடம் இனிமேல் உங்கள் படத்தை இயக்கவில்லை என்று கூறினேன். ஆனால் அஜித் அவசரப்படாதீர்கள் கொஞ்சம் பொறுங்கள், வலிமை படத்திற்கான ரிசல்ட் வரும் என்று கூறியிருந்தார். அஜித் சொன்ன அந்த ஒரு வார்த்தையை நான் நம்பினேன்.
அவர் சொன்னது படியே அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைக்க தொடங்கியது. அதுமட்டுமின்றி வலிமை படத்தை பார்க்க குடும்ப ஆடியன்ஸ் வந்தனர். மேலும் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி லாபமடைய செய்து விட்டார்கள்.
அதன் பிறகு தான் தன்னுடைய எண்ணத்தை மாற்றிக் கொண்டு அஜித்துடன் மீண்டும் பயணிக்க ஒத்துக்கொண்டேன். அதுவும் ஒரு உண்மைச் சம்பவத்தை வைத்து எடுக்கலாம் என்ற யோசனையில் தான் துணிவு படம் உருவானது. இந்த படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும் என வினோத் உறுதி அளித்துள்ளார்.