Surya : என்னதான் நடிகர் சூர்யாவின் அப்பா மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் தன் மகனுக்கு சினிமா ஆசையை காமித்து வளர்க்கவில்லயாம். பிறகு எப்படி சூர்யா இன்று டாப் நடிகராக இருக்கிறார் என்று பார்த்தால், யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை கூறியுள்ளார் சூர்யா.
அதாவது சூர்யாவிற்கு நடிப்பின் மீது பெரிய நாட்டம் இருந்தது இல்லயாம். இவர் படிப்பை முடித்து விட்டு பனியன் கம்பெனியில் வேலை பார்த்தாராம். அதுவும் 15 நாளுக்கு 750 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்தாராம்.
அப்பாவிற்கு தெரியாமல் நடிக்க வந்தேன்..
அதே கம்பெனில ட்ரெயினிங் எடுத்துகிட்டே சம்பளமும் வாங்கிருக்காரு. 3 வருஷம் வேலைக்கு அப்புறம் சம்பளம் 8000 ரூபாய் வாங்குனாராம். இவ்வாறு போய்க்கொண்டிருக்க சூர்யாவின் அம்மா, அப்பா சிவகுமாருக்கு தெரியாமல் 25000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார்களாம். அதை சூர்யா பார்துவிட்டராம்.
இந்த கடனை அப்பாவுக்கு தெரியாமல் அடைப்பதற்காக சூர்யா சினிமாவிற்கு நடிக்க வந்தாராம். முதலில் சின்ன சின்ன கதாபாத்திரம் செய்து இந்த கடனை அடைக்கலாம்னு நினைத்து வந்தாராம். பிறகு இவர் ஹீரோக்க தான் பொருத்தம் என ஹீரோ ஆக்கிவிட்டார்களாம்.
இப்படி கடனை அடைக்கத்தான் சினிமாவிற்கு வந்தேன், இன்று உங்கள் முன்னாடி சூர்யாவாக வளர்ந்து நிற்கிறேன் என சூர்யா மனம் திறந்து பேசியுள்ளார். என்னதான் கடமைக்கு சூர்யா சினிமாவிற்கு வந்தாலும் அவர் உடம்பில் ஓடுவது சிவகுமாரின் இரத்தம் அல்லவா! அதான் நடிப்பில் இன்று கலக்கி கொண்டிருக்கிறார்.
“புலிக்கு பிறந்தது பூனையாகுமா” சிவகுமாரை விட சினிமாவில் உச்சத்தை பெற்றுள்ளார்கள் அவரது இரண்டு மகனுமே. நாம் எந்த சூழ்நிலையில் ஒரு துறையில் நுழைந்தாலும் சரி, அந்த துறையில் நாம் நம்மை ஜொலிக்க வைக்க முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கு சூர்யா ஒரு எடுத்துக்காட்டு. இக்கட்டான சூழ்நிலைதான் ஒரு மனிதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.