விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான லத்தி படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்த விஷாலுக்கு ஓரளவு மனதை தேற்றிக் கொள்ளும் அளவிற்கு படம் அமைந்தது. இதைத்தொடர்ந்து அவர் நடித்து வரும் படம் மார்க் ஆண்டனி.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா நடித்து வருகிறார். சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரங்களில் மிரட்டி வரும் எஸ் ஜே சூர்யா மார்க் ஆண்டனி படத்தில் வில்லன் கதாபாத்திரமா அல்லது வேறு ஏதாவது கதாபாத்திரமா என்பது தற்போது வரை தெரியவில்லை.
மேலும் எஸ் ஜே சூர்யா இது தவிர பல படங்களை கைவசம் வைத்துள்ளார். ஆனால் இப்போது விஷால் பழையபடி வேலையை காட்ட ஆரம்பித்து விட்டாராம். அதாவது தான் சொந்தத் தயாரிப்பு படம் என்றாலும் படப்பிடிப்பில் விஷால் சரியாக கலந்து கொள்ள மாட்டார் என்ற ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.
லத்தி படம் ரிலீஸ் தள்ளி போனதற்கு காரணமும் விஷால் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாதது தான் என்று கூறப்பட்டது. இப்போது இதே போல் மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பிலும் விஷால் ஒழுங்காக கலந்து கொள்வதில்லை. இப்aபடத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் விஷால் ஆகியோர் இடையே தான் நிறைய காட்சிகள் உள்ளதாம்.
எதற்காக எஸ் ஜே சூர்யா எக்கச்சக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். விஷால் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் எஸ் ஜே சூர்யாவின் கால்ஷீட் வீணாகப் போகிறதாம். இதனால் பொறுத்து பொறுத்துப் போன எஸ் ஜே சூர்யா ஒரு கட்டத்திற்கு மேல் பொங்கி எழுந்து விட்டாராம். மார்க் ஆண்டனி படத்தை விட்டுவிட்டு வேறு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்று விட்டாராம்.
அதன்பின்பு விஷால் தாமாக முன்வந்து எஸ் ஜே சூர்யாவிடம் கெஞ்சி கூத்தாடி இனிமேல் இப்படி எல்லாம் நடக்காது, படப்பிடிப்பில் சரியாக கலந்து கொள்கிறேன் என மன்னிப்பு கேட்டுள்ளாராம். ஆகையால் இனி மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் எந்த பிரச்சனையும் வராது என விஷால் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.