Actor Rajini: ரஜினி கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஜெயிலர் படத்தை நடித்து முடித்து இருக்கிறார். இந்த ஆண்டு இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமையப் போகிறது. அந்த வகையில் இப்படத்தில் வெளிவந்த இரண்டு பாடல்கள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி இழுத்திருக்கிறது.
மேலும் ரஜினி இப்படத்தை முடித்த கையோடு அடுத்த படத்திற்கு தன்னைத்தானே மெருகேற்றிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அடுத்து கொஞ்சம் மாதங்கள் ஓய்வு எடுத்த பிறகு லோகேஷ் கூட்டணியில் இணைய போவதாக பல பேச்சுக்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இதற்கிடையில் இவர் நடித்து சூப்பர் ஹிட் ஆன படத்தில் நடிப்பதற்காக இயக்குனர் இவரிடம் கேட்டிருக்கிறார். இந்த படம் தான் ரஜினிக்கு மிகப்பெரிய லாபத்தை சம்பாதித்து கொடுத்து செகண்ட் இன்னிங்ஸில் தூக்கி விட்ட படமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட படத்தை மறுபடியும் நான் நடிக்க மாட்டேன் என்று மறுத்திருக்கிறார்.
அவர் மறுத்ததற்கான காரணம் முதல் பாகம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகிவிட்டது. இதை இப்படியே விட்டு விடாமல் ஏன் மறுபடியும் இரண்டாம் பாகம் என்று கிளறுகிறீர்கள் என கேட்டிருக்கிறார். அதற்கு அந்த இயக்குனர் அதிக அளவில் ஹிட்டானதால் தான் மறுபடியும் எடுக்கலாம் என்று முயற்சிக்கிறேன். அதற்காக நீங்கள் நடிக்கலாம் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் அதற்கு ரஜினி கூறியது, அதை நடிகர்களை நடிக்க வைத்து அந்த படத்தின் பெயரை கெடுக்க வேண்டாம். வேண்டுமென்றால் நீங்கள் வேறு ஹீரோவை வைத்து இரண்டாம் பாகத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டாராம். அதன் பிறகு தான் இவருடைய சிஷ்யனாக இருக்கும் லாரன்ஸை வைத்து சந்திரமுகி இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் இயக்குனர் பி வாசு.
இதனைத் தொடர்ந்து சந்திரமுகி 2 போஸ்டர் வெளியானதிலிருந்து, இப்படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அதுவும் வேட்டைனாக லாரன்ஸ் போஸ்டர் வெளியானதும் அச்சு அசல் மாறாமல் ரஜினியை பார்ப்பது போல் இருக்கிறது என்று பலரும் அவர்களுடைய கமெண்ட்ஸ்களை போட்டு வருகிறார்கள். அந்த வகையில் சந்திரமுகி இரண்டாம் பாகம் எந்த மாதிரி வெற்றி கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.