எனக்கும் விஜய்க்கும் எந்த பிரச்சனையும் இல்லைன்னு லியோ ரிலீஸ்ல தெரியும்.. மறைமுகமா மிரட்டி உருட்டி பார்க்கும் உதயநிதி

Actor Vijay: விஜய்யின் அடுத்த கட்ட படமான லியோ படத்தின் எதிர்பார்ப்பை காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் இப்படம் ரிலீஸ் குறித்து மறைமுகமாக மிரட்டி புரட்டி பார்க்கும் உதயநிதி பற்றிய தகவலை இங்கு காண்போம்.

தன் சினிமா பயணமாக சைக்கோ, கலகத் தலைவன் போன்ற படங்களில் முன்னணி கதாநாயகனாக நடித்தவர்தான் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்பொழுது மேற்கொள்ளும் படம் தான் மாமன்னன், இப்படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என்ன அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் சினிமாவை தொடர்வதாக இல்லை அரசியலில் ஈடுபடுவதாக தன் முடிவை வெளிப்படுத்தி உள்ளார்.

இது ஒரு புறம் இருக்க, தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்கள் முக்கால்வாசி ரெட் ஜெயின்ட் மூவிஸ் தான் விநியோகப்படுத்துகிறது. அவ்வாறு இருக்க, தற்பொழுது பல எதிர்பார்ப்புகளை முன்வைத்து வரும் விஜய்யின் லியோ படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிப்பு வந்துள்ளது.

அதைத்தொடர்ந்து இப்படத்தை யார் விநியோகப்படுத்துவார்கள் என்ற கேள்வியும் முன் வைக்கப்படுகிறது. ஏற்கனவே உதயநிதிக்கும், விஜய்க்கும் இடையில் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வருகிறது. அதை குறித்து உதயநிதியிடம் கேட்கையில், எனக்கும் விஜய்க்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.

அவர் கூறியதாக சில விஷயங்கள் என் காதில் பட்டது அதேபோல் நான் கூறியதாக அவரை சேர்ந்த விஷயங்களை கொண்டு இருவரிடையே சின்ன மனஸ்தாபம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சுமார் ஒன்றரை வருடம் எங்களுக்கு எந்த பேச்சு வார்த்தையும் இல்லை என ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார் உதயநிதி.

அதைத்தொடர்ந்து பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் லியோ படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் விநியோகப்படுத்தும் என்ற பேச்சு வார்த்தையும் அடிபட்டு வருகிறது. தற்பொழுது அரசியலிலும் களம் இறங்கும் விஜய்யின் செயல்களை கொண்டு, இப்படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.