ஐடி ரைடு, படப்பிடிப்பு தாமதம்.. அஜித்தின் பொறுமையை சோதித்துப் பார்க்கும் விடாமுயற்சி

துணிவு படத்திற்கு பின் பெரும் போராட்டத்திற்குப் பிறகு விடாமுயற்சி என்று பெயர் வைத்து மகிழ்திருமேனி இயக்கத்தில்அஜித் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படம் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் அனிருத் இசையில், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

விடாமுயற்சி படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அஜித்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி அன்று வெளியாகி இணையத்தை ரணகளப்படுத்தியது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை கடந்த மார்ச் மாதமே துவங்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அந்த சமயத்தில் அஜித்தின் தந்தை காலமானதால் ஷூட்டிங் தள்ளிப் போனது.

அதை அடுத்து ஏப்ரல் மாதம் ஷூட்டிங் துவங்கும் எனக் கூறப்பட்டது. ஆனால் அஜித் தன் பைக்கை எடுத்துக் கொண்டு சுற்றுலாவை மேற்கொள்ள சென்று விட்டார். இதனால் மே மாதத்திற்கு ஷூட்டிங்கை தள்ளி வைத்தனர். தற்போது நிலவரத்தின் படி மே மாதத்திலும் இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாக வாய்ப்பில்லை.

மே 22 படபிடிப்பு தொடங்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மேற்கொண்டு இரண்டு மூன்று வாரங்களாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கு காரணம் லைக்காவில் நடந்து வரும் வருமான வரி சோதனை. இதனால் படப்பிடிப்பு இன்னும் தாமதமாக தொடங்கப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதனால் அஜித், யோசித்து இன்னும் படம் தாமதமானால் படத்தில் இருந்து விலக முடிவு செய்யப்பட்டுள்ளார் என பேச்சுகள் வெளி வருகின்றன. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த தகவல் வெளிவருவதற்கு காரணம் படப்பிடிப்பு தாமதமாக தொடங்கப்படுவதால் தான்.

ஒருவேளை படப்பிடிப்பு தொடங்கி விட்டால் இந்த தகவல் பொய்யாக மாறிவிடும் என்று ரசிகர்கள் நல்ல தகவலுக்காக காத்திருக்கின்றனர். இப்படி விடாமுயற்சி படத்தை எடுப்பதற்காகவே பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய சோதனை காலத்தில் அஜித் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்.