வாய்ப்புகள் இல்லாத நடிகை.. நடிக்க கூப்பிட்டால் அதிக சம்பளம் கேட்கும் அவலம்.!

பொதுவாக நடிகைகள் தங்களது மார்க்கெட் உள்ள போதே அதிக படங்களில் நடித்து சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்பது தான் தற்போது நிலைமை ஆக உள்ளது. அந்த வகையில் ஆரம்பத்தில் ஒரு நடிகை சினிமாவுக்கு வந்த புதிதில் எக்கச்சக்க பட வாய்ப்புகள் குவிந்து வந்தது.

அதுவரை குடும்ப பங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை மார்க்கெட் சரியா ஆரம்பித்தவுடன் கிளாமர் காட்ட ஆரம்பித்தார். அப்போதும் அவர் நடிப்பில் வெளியான படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து தான் வருகிறது. இப்போது வரை ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டும் என நடிகை போராடி வருகிறார்.

அதாவது நடிகை அஞ்சலி தான் தற்போது தனது மார்க்கெட்டை இழந்து வெற்றி படம் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். சமீபகாலமாக அவரது படங்கள் ஓடிடியில் வெளியாகி படுதோல்வியை சந்தித்து வருகிறது. ஆனால் மனம் தளராத அஞ்சலி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இப்போது ராம் இயக்கத்தில் அஞ்சலி ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் மீது தற்போது அஞ்சலி முழு நம்பிக்கை வைத்துள்ளாராம். அதாவது இந்த படம் வெளியானால் கண்டிப்பாக தமிழ் சினிமா தன்னை கொண்டாடும் என்ற அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளார்.

இப்போது அஞ்சலி இடம் கதை சொல்ல நிறைய இயக்குனர்கள் வருகிறார்கள். ராம் படம் வெளியானால் கண்டிப்பாக தனது மார்க்கெட் உயரும் என்பதால் தற்போது அந்த இயக்குனர்களிடம் ஒரு கோடி வரை சம்பளம் கேட்கிறாராம். ஆனால் அந்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படம் வெற்றி பெற்றால் பிறகு பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்களாம்.

மேலும் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள அந்த படம் எப்போது வெளியாகும் என்பதே தற்போது வரை தெரியாத சூழ்நிலையில், வருகின்ற வாய்ப்பை எல்லாம் அந்த ஒரு படத்தை நம்பி அஞ்சலி இழந்த வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அஞ்சலி நினைத்தபடி அந்த படம் அவருக்கு கை கொடுக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.