தற்போது இசைஞானி இளையராஜா மற்றும் ஜேம்ஸ் வசந்த் இருவருக்கும் பனிப்போரே நிலவி வருகிறது. இளையராஜா கிறிஸ்துவ மதத்தை இழிவு படுத்துவதாக எண்ணி ஜேம்ஸ் வசந்த் அவரை மட்டமான மனிதன் என விமர்சித்தார். அதேபோல் ஜேம்ஸ் வசந்த்தும் நானும் சளைத்தவர் அல்ல என்று இந்து மதத்தை விமர்சித்திருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் இவர்களுக்குள்ளே இருக்கும் தீராத வன்மம் தான்.
இதைப் பற்றி தெரிந்த சினிமா விமர்சகர் அந்தணன் சமீபத்திய பேட்டி ஒன்றில், 15 வருடத்திற்கு முன் இளையராஜா மற்றும் ஜேம்ஸ் வசந்த் இருவருக்கும் இடையே நடந்த காரசாரமான நிகழ்வுகளை உடைத்து கூறியுள்ளார். 2008 ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கி நடித்த சுப்பிரமணியபுரம் படத்தில் ஜேம்ஸ் வசந்த் முதன்முதலாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. சொல்லப்போனால் இளையராஜா இசை அமைப்பது போலவே மனதை வருடும் பாடல்களாக இருந்ததால், இதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் ஃபேவரைட் பாடல்களாகவே மாறியது.
இந்நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்களில் ஒரு காட்சியில் ‘சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும்’ என்ற இளையராஜாவின் பாடலை, அவரது அனுமதி இல்லாமல் பயன்படுத்தி இருப்பார். இந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு இளையராஜாவிற்கு இந்த படத்தில் அவருடைய பாடலை அனுமதி இல்லாமல் பயன்படுத்தி இருப்பது தெரியவந்து, ஜேம்ஸ் வசந்துக்கு அதிரடியாக ஒரு நோட்டீசை அனுப்புகிறார்.
என்னுடைய அனுமதி இல்லாமல் எப்படி அந்த பாடலை பயன்படுத்தி இருக்கலாம் என்று ஜேம்ஸ் வசந்த்தை இளையராஜா நிற்க வைத்த கேள்வி கேட்டிருக்கிறார். ஒரு பெரிய இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய இளையராஜாவின் பாடலை அனுமதி இல்லாமல் பயன்படுத்தக்கூடாது என்பது கூட ஜேம்ஸ் வசந்துக்கு தெரியாமல் போனது.
அன்று இளையராஜா நோட்டீஸ் அனுப்பியதை மனதில் வன்மமாக வைத்துக் கொண்டு தான், இப்போது கோபப்படுவது எந்த விதத்தில் நியாயம். ஆனால் ஜேம்ஸ் வசந்த்தின் சமீப காலப் பேட்டிகளை பார்க்கும்போது இளையராஜா எப்போதுமே தலை மேல் ஒரு கொடுக்கை வைத்துக் கொண்டு எல்லாரையும் கொட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு தேளுக்கு நிகரானவர் தான் இளையராஜா என்றெல்லாம் விமர்சிக்கிறார். ஆனால் திரைத்துறையில் இளையராஜாவிடம் பழகியவர்களிடம் பேசும் போது பல நேரங்களில் அவர் குழந்தை போல் சிரிப்பதும், அன்புடன் பழகக் கூடியவர் என்றெல்லாம் சொல்கின்றனர்.
ஆனால் அவர் கோபப்பட்டு பேசுவதை தான் ஜேம்ஸ் வசந்த் பெரிதாக சொல்கிறார். இப்போது வேண்டுமானால் இளையராஜாவிற்கு படம் கிடைக்காமல் இருக்கும் சூழல் நிலவலாம். ஆனால் விடுதலை போன்ற ஒரு சில படங்களில் தன்னை நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார். இந்த சூழ்நிலையை சாதகமாக வைத்துக்கொண்டு ஜேம்ஸ் வசந்த் இஷ்டத்திற்கு பேசுவது சரி அல்ல என்று, அவருக்கு இருக்கும் வன்மத்தை அந்தணன் வெளிப்படுத்தி இருக்கிறார்.