vanitha : நடிகை வனிதா விஜயகுமார் அவர்கள் சிறுவயதிலிருந்தே தமிழ் சினிமா துறையில் நடித்துக் கொண்டிருக்கிறார். காலகட்டத்திற்கு அப்புறம் இவரை நாம் பிக் பாஸில் பார்த்தோம். அதற்குப் பிறகு வரிசையாக திருமண சர்ச்சைகளில் சிக்கினார். ஆனால் எதற்கும் மனம் தளராத ஒரு நடிகை.
பல பிரச்சினைகளுக்கு நடுவே இவர் நடன இயக்குனர் ராபர்ட் காதலித்தார் பிறகு இவர்களது உறவை முறித்துக் கொண்டனர். இவர் நடிகை மட்டுமல்லாமல் திரைப்பட இயக்குனரும் ஆவார். தற்போது நடன இயக்குனர் ராபர்ட் மற்றும் வனிதா அவர்கள் இணைந்து MR&MRS என்ற படத்தில் நடித்தார்கள்.
இது தற்போது திரைக்கு வந்திருக்கும் நிலையில், இளையராஜா வனிதா மீது வழக்கு பதிந்துள்ளார். இளையராஜா அவர்களை இசையமைத்த பாட்டை வனிதா விஜயகுமார் அவர்கள் அவர் நடித்த படத்தில் பயன்படுத்தி உள்ளார் என்று வனிதா மீது வழக்கு பதிவு செய்துள்ளார் இளையராஜா.
அதைப்பற்றி வனிதா விஜயகுமார் அவர்கள் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் கண்கலங்கி கூறியிருப்பதாவது சிறு வயதில் இருந்து நான் இளையராஜா சார் வீட்டிலும் வளர்ந்திருக்கிறேன். அவர் ஒரு லெஜன்ட். அவர் இசையில் கடவுள் போல, கடவுள் நம் மீது கோபம் கொண்டால் நாம் என்ன செய்வது என்று கூறியுள்ளார்.
இது மட்டுமல்லாமல் நான் இளையராஜா அவர்கள் வீட்டிற்கு மருமகளாக செல்ல வேண்டியது. ஒரு சில விஷயங்களை நான் ஓபன் ஆக வெளியில் பேச முடியாது. அப்படி பேசினால் அது தேவையில்லாத பிரச்சினை என்றும் அழுது கொண்டே கூறியுள்ளார்.
வனிதாவிடம் தப்பிச்சது யுவனா? கார்த்திக் ராஜாவா? வெங்கட் பிரபுவா?
ஒருவேளை இவர் இளையராஜா வீட்டிற்கு மருமகளாக சென்று இருந்தால் இவர் யாரை திருமணம் செய்து கொண்டிருப்பார் என்ற கேள்வி அனைவரையும் மக்களிடம் எழுகிறது. ஒருவேளை கார்த்திக் ராஜாவை திருமணம் செய்திருப்பாரா? அல்லது யுவன் சங்கர் ராஜாவை திருமணம் செய்திருப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க இளையராஜா குடும்பம் என்று தானே கூறியுள்ளார் ஒருவேளை கங்கை அமரன் மகன் வெங்கட் பிரபுவாக இருக்குமோ என்று ஒரு பக்கம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இவ்வாறு வனிதா விஜயகுமார் பதட்டத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் உளறிக்கொட்டி விட்டார் போல.