கடைசி நேரத்தில் பவதாரிணியின் ஆசை.. நிறைவேற்றிய இசைஞானி

Bhavadharini – ilaiyaraja : சமீபத்தில் பிரபல பாடகி பவதாரிணியின் மறைவு செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி சிறுவயது முதலில் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகிவிட்டார். மேலும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் கச்சேரியில் பவதாரிணி தொடர்ந்து பாடல் பாடி வந்தார்.

இந்நிலையில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பவதாரணி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதுவரை பலருக்கும் தெரியாத பவதாரிணியை பற்றிய விஷயங்கள் தொடர்ந்து செய்திகளாக வெளியாகி கொண்டிருக்கிறது. இப்போது பவதாரிணியின் நண்பர் கொடுத்த பேட்டி ஒன்று வைரலாகிக் கொண்டிருக்கிறது.

அதாவது இலங்கைக்கு பவதாரணி சிகிச்சைக்கு வந்த போது தான் இவர் உடன் நட்பு ஏற்பட்டுள்ளது. தனது கணவருடன் தான் பவதாரணி சிகிச்சைக்கு வந்திருந்தாராம். அவருக்கு என்ன பிரச்சனை இருந்தது என்பதை அவரது கணவர் சிபிராஜ் கூறியிருக்கிறார். அதற்கான சிகிச்சையும் தொடங்கப்பட்டதாம்.

இளையராஜாவின் குடும்பம் எவ்வளவு செலவானாலும் பவதாரிணியை காப்பாற்றி விட வேண்டும் என்ற முடிவில் இருந்தனர். இந்நிலையில் பவதாரிணி இலங்கையில் இருந்த போது இளையராஜாவின் இசை கச்சேரியும் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பவதாரணி தனது தந்தையை பார்த்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்துள்ளார்.

மேலும் பவதாரிணி தங்கியிருந்த ஹோட்டல் அறையின் பக்கத்திலேயே இளையராஜாவுக்கும் ஒரு அரை புக் செய்யப்பட்டிருந்தது. மேலும் இளையராஜா பவதாரிணியை சந்தித்து இரண்டு மணி நேரம் பேசினாராம். இதுதான் பவதாரணியின் கடைசி ஆசையாக இருந்துள்ளது. ஏனென்றால் மறுநாளே அவரை இறப்பு சூழ்ந்து கொண்டது.