தென்னிந்திய சினிமாவை மிரட்டிய இந்தியன் 2.. இதுவரை எந்த படமும் செய்யாத சாதனை

இந்தியன் 2 படத்தினை ஆரம்பத்தில் இருந்தே எப்போது ரிலீஸ் ஆகும் என்று உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது இது எப்படியும் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் என்று கூறப்படுகிறது.

ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்க, இந்த படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை விலைக்கு பேசி இருக்கிறார்கள். இந்த படத்தை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் எந்த சினிமாவும் இந்த அளவிற்கு விலை பேசப்படவில்லை.

அந்த அளவிற்கு அதிக அளவு பேசப்பட்டிருக்கிறது இந்தியன் 2. இது மட்டும் நடந்தால் கண்டிப்பாக ஷங்கர் நினைத்த மாதிரி ஆயிரம் கோடி தாண்டி இந்த படம் வசூல் செய்யும் என உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் சென்னையில் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து தைவான் சென்ற படக்குழுவினர் அங்கு படப்பிடிப்பை நிறைவு செய்து, உடனடியாக தென்னாப்பிரிக்கா சென்று இருக்கின்றனர். அதைத் தொடர்ந்து ஹைதராபாத், தனுஷ்கோடி, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

படத்தை உடனடியாக முடித்து வெளியிட வேண்டும் என்ற முனைப்புடன் ஷங்கர் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் இருவரும் கடினமாக உழைத்து வருகின்றனர். இதற்கு இடையில் இந்தியன் 2 படத்தின் பிரீ பிசினஸ் படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.

இந்த படத்தின் சாட்டிலைட் மட்டும் டிஜிட்டல் உரிமையை விலைக்கு வாங்குவதற்கு முன்னணி நிறுவனங்கள் பல கோடிகளை கொட்டி கொடுக்க போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது நிச்சயம் இந்தியன் 2 ஆயிரம் கோடி வசூலை அசால்டாக தட்டித் தூக்கும் என்ற நம்பிக்கை ஷங்கருக்கு ஏற்பட்டுள்ளது.