Robo Shankar : நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் பிகில் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தனது உறவினரான கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த சூழலில் ஜனவரி மாதம் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தைக்கு கமல் தான் நட்சத்திரன் என்ற பெயர் சூட்டி இருந்தார். அந்த குழந்தை பிறந்ததிலிருந்து என்னென்ன செய்கிறது என்று எல்லாவற்றையும் தனது யூடியூபில் பதிவிட்டு வந்தார் இந்திராஜா. இந்த சூழலில் ஹெகுரு என்ற மூளை பயிற்சி மையத்தில் தனது குழந்தையை சேர்த்ததாக சொல்லி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
இதைப் பார்த்த பலரும் ஆறு மாத குழந்தைக்கு இந்த பயிற்சி தேவையா என்று கேள்வி எழுப்பி இருந்தனர். மேலும் இது இணையத்தில் மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. இந்த வீடியோவுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
இந்திரஜா சங்கர் பரப்பிய தவறான தகவல்
பச்சிளம் குழந்தையை விளம்பரத்திற்காக இப்படி பயன்படுத்துவது மிகவும் தவறான செயல் என்று கூறினர். இதை அடுத்து இந்திரஜா மற்றும் அவரது கணவர் ஹெகுரு பயிற்சி நிறுவனத்தைப் பற்றி தவறான தகவல்கள் பரவி வருவதாக பேசி இருந்தனர்.
மேலும் இது குழந்தைக்கான ஆரோக்கியத்தின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் குறிப்பிட்டனர். ஆனால் இப்போது ரோபோ ஷங்கரின் மகள் தவறான தகவலை பரவி வருவதாக தமிழக அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் கொடுத்துள்ளது.
அதாவது தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனை திறன் குறைந்துவிட்டது என கூறப்படுவது ஆதாரம் அற்றது. ஹெகுரு பயிற்சி தொடர்பாக ரோபோ சங்கர் மகள் இந்திரஜா வெளியிட்ட வீடியோவில் பல தவறான தகவல் இருப்பதாக இருப்பதை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.இதனால் இந்திராஜா இப்போது தவறான தகவலை பரப்பியதனால் சட்ட சிக்கலில் மாட்டி இருக்கிறார்.