வாரிசு சூட்டிங்கில் நடக்கும் அநியாயம்.. 250 கோடிகளில் லாபம் பெற்றும் நடக்கும் மோசமான சம்பவம்

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் வாரிசு படத்தில் நடித்த வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. மேலும் பொங்கல் ரிலீஸுக்காக இப்படம் தயாராகி வரும் நிலையில் தீபாவளி கொண்டாடுவதற்காக விஜய் ஐந்து நாள் துபாய் சென்றுள்ளார். தற்போது டெக்னீசியன் சம்பந்தமான வேலைகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் வாரிசு சூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கு என்று தனியாக ஸ்பெஷல் சாப்பாடு தயாராகி இருக்குமாம். மேலும் விஜய் தவிர்த்து மற்றவர்களுக்கு ஒரு விதமான சாப்பாடு ஏற்பாடு செய்திருப்பார்களாம். அதிலும் வேலை செய்யும் அடிமட்ட ஆட்களுக்கு தரமற்ற சாப்பாடு தான் கொடுக்கிறார்களாம்.

இவ்வாறு வாரிசு சூட்டிங் ஸ்பாட்டில் ஒவ்வொருவருக்கும் ஓர்வஞ்சனையாக நடந்து வருவது விஜய் காதுக்கு சென்றதா என்பது தெரியவில்லை. வாரிசு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை கிட்டதட்ட 250 கோடி வியாபாரம் ஆகி உள்ளதாம்.

இந்த படத்திற்கு இவ்வளவு லாபம் வந்தும் தொழிலாளர்களுக்கு தரமற்ற சாப்பாடுகளை கொடுத்து வருவது விஜய் கண்டுகொள்ளவே இல்லையாம். அந்த காலத்தில் கேப்டன் விஜயகாந்த் தனக்கு கொடுக்கும் உணவை போன்று தான் மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று கூறுவாராம்.

ஏனென்றால் சாப்பாட்டு விஷயத்தில் விஜயகாந்த் மிகவும் கண்டிப்பாக இருப்பாராம். அதுமட்டுமின்றி சூட்டிங் ஸ்பாட்டில் அனைவருடன் அமர்ந்து தான் விஜயகாந்த் எப்போதுமே சாப்பிடுவாராம். தன்னுடைய வீட்டிற்கு யார் வந்தாலும் உணவு உபசரிக்காமல் விட மாட்டாராம்.

அதேபோல் தான் எம்ஜிஆர் வீட்டிலும் எப்போதுமே அடுப்பு எரிந்து கொண்டே இருக்குமாம். தன் வீட்டிற்கு உதவி கேட்டு வருபவர்களுக்கு எம்ஜிஆர் எப்போதும உதவி செய்யக் கூடியவர். இவ்வாறு எம்ஜிஆர், கேப்டனை பார்த்து கத்துக்கோங்க தளபதி என அனைவரும் கூறிவருகிறார்கள்.