என்னை அசிங்கப்படுத்திய அந்த விஷயம்தான் உயர்த்தியது.. மேடையில் யோகி பாபுவின் கண் கலங்க வைத்த பேட்டி

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான யோகி பாபு, அதன்பின் யாமிருக்க பயமேன் படத்தில் ‘பன்னி மூஞ்சி வாயன்’ என்ற கேரக்டரில் மக்களிடம் பிரபலமானார். அதேபோல் சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு, அஜித்தின் வீரம், விஜய்யின் மெர்சல் போன்ற படங்களில் காமெடி என்கின்ற பெயரில் அவரைக் குறித்து பெரும்பாலும் உருவ கேலிகளே செய்து ரசிகர்களை சிரிக்க வைத்தனர்.

இருப்பினும் அதையெல்லாம் கண்டு கொள்ளாத யோகி பாபு அதன் பின் பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, தற்போது கதாநாயகனாக ரவுண்டு கட்டி கொண்டு இருக்கிறார். முதலில் இவர் மண்டேலா படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்போது பொம்மை நாயகி என்ற படத்தில் லீடிங் கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்த படம் வரும் பிப்ரவரி 3ம் தேதி ரிலீஸ் ஆகுவதால் படத்திற்கான புரமோஷன் படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. அப்போது பேசிய யோகி பாபு, தமிழ் சினிமாவில் தன்னை பன்னி வாயன் முதல் ஏகப்பட்ட உருவ கேலிகளை மூஞ்சிக்கு நேராகவே செய்து இருக்கின்றனர்.

ஆனால் அவர்களுக்கெல்லாம் பல நூறு படங்களை நடித்து பதிலடி கொடுத்திருக்கிறேன். எல்லாருக்கும் நடக்கும் உருவ கேலி எனக்கு கொஞ்சம் அதிகமாகவே நடந்தது. இருப்பினும் என்னுடைய முகத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது என மாரி செல்வராஜ் கூறினார். அதன்பின் யோகி பாபுவை வைத்து பொம்மை நாயகி என்ற படத்தை எடுக்க நினைத்ததால் தாராளமாக பண்ணலாம் என்றும் இந்த படத்திற்கு ஒத்துக் கொண்டாராம்.

மேலும் அப்பாவின் உணர்ச்சி போராட்டத்தை வெளிப்படுத்தும் பொம்மை நாயகி படத்தில் தந்தையாக நடித்திருக்கும் யோகி பாபுவுக்கு நிஜமாகவே பெண் குழந்தை பிறந்து 5 மாதம் ஆகிறது. ஆகையால் அப்பாவுக்கு எவ்வளவு வலி இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் பொம்மை ஆகி படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை பார்த்த பட குழுவினர் யோகி பாபுவை நல்ல உணர்வு பூர்வமான நடிகன் என்றும் கூறியுள்ளனர்.

இப்படி காமெடியனாக தன்னை சித்தரித்து இப்போது ஹீரோவாக வலம் வரும் யோகி பாபு, சினிமாவில் தன்னை அடையாளப்படுத்தியது உருவ கேலிகள் தான் என பெருமையாக பேசுகிறார். இவருடைய இந்த உருக்கமான பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பலரையும் கண்கலங்க வைக்கிறது.