டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றி வாகை.. சசிகுமார் சம்பள உயர்வுக்கு தயாரா?

Sasikumar : சமீபத்தில் சூர்யாவின் ரெட்ரோ படத்துடன் டூரிஸ்ட் ஃபேமிலி படம் வெளியானது. சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் குடும்ப என்டர்டைன்மெண்ட் படமாக டூரிஸ்ட் ஃபேமிலி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

இலங்கையைச் சேர்ந்த தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு வரும் போது என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதை நகைச்சுவையாக இயக்குனர் இந்த படத்தில் கொடுத்திருந்தார்.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்துவிட்டு ரஜினி, சிவகார்த்திகேயன் போன்ற பல பிரபலங்கள் படக்குழுவை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்திருந்தனர். இப்போது இந்த படம் 43 கோடி வசூலை தாண்டி இருக்கிறது.

சசிகுமார் சம்பளத்தை உயர்த்துகிறாரா

இந்த சூழலில் சசிகுமார் படத்தின் வெற்றி விழாவில் பேசுகையில் பத்திரிக்கையாளர்கள் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்துவிட்டு சம்பளத்தை உயர்த்துகிறீர்களா என்று கேட்டார்களாம். நான் சம்பளத்தை அதிகரிக்க போவதில்லை என்று சசிகுமார் கூறியிருக்கிறார்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு டூரிஸ்ட் ஃபேமிலி படம் வெற்றி கொடுத்துள்ளது. என்னுடைய சினிமா கேரியரில் அதிக வசூல் செய்தது குட்டி புலி மற்றும் சுந்தரபாண்டியன் படங்கள் தான். அதையெல்லாம் டூரிஸ்ட் ஃபேமிலி முறியடித்திருக்கிறது.

முதல் நாளே கிட்டத்தட்ட ரெண்டரை கோடி வசூலை எட்டியது. இந்த படம் மிகப்பெரிய ஓபனிங் கொடுத்தது. மேலும் டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றி தனக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்துள்ளதாக சசிகுமார் உணர்ச்சி பொங்க பேசி இருந்தார்.