நட்சத்திர தம்பதிகளாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு தனி இடம் இருந்தாலும் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தது.
ஆனாலும் தனது கணவர் விக்னேஷ் சிவனுக்காக பல பெரிய கைகளிடம் பேசி வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார் நயன்தாரா. அப்படிதான் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைத்தது. ஆனால் ஒரு சில காரணங்களினால் அஜித் தற்போது விக்னேஷ் சிவன் கதையை நிராகரித்துவிட்டு மகிழ்திருமேனியை ஓகே செய்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெற்றியோ, தோல்வியோ அவமானம் கற்றுக் கொடுத்த பாடம் என பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா புருஷனுக்கு இப்படி ஒரு நிலைமையா என விமர்சனம் செய்து வருகிறார்கள். அதாவது விக்னேஷ் சிவன் ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
அதன் பின்பு படிப்படியாக முன்னேறி ஒரு இயக்குனராக அவதாரம் எடுத்தார். அதில் படாத கஷ்டங்கள் பட்டு தான் இந்த நிலைமையை அடைந்தார். இப்படி இருக்கையில் ஒரு பெரிய நடிகர் படத்திலிருந்து விலகியதற்காக இவ்வாறு சமூக வலைத்தளத்தில் வசனங்கள் போடுவது அனுதாபத்திற்காக செய்யும் வேலை என சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு நிலைமையா என எல்லோரும் பரிதாபப்படுவார்கள். இதன் மூலம் ஏதாவது பட வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் என்ற எண்ணத்தில் இப்படி செய்கிறார் என பலரும் கூறுகின்றனர். கடின உழைப்புக்கு எப்போதுமே பலன் கிடைக்கும்.
அப்படிதான் விக்னேஷ் சிவன் பல அவமானங்களை சந்தித்து ஒரு உயரத்தை அடைந்துள்ளார். இப்போதும் தனது திறமை மற்றும் உழைப்பில் நம்பிக்கை வைத்து அடுத்த படத்தை எடுத்தால் நிச்சயம் வெற்றிப் பெறலாம். ஆனால் தேவையில்லாமல் இவ்வாறு காமெடி செய்து வருகிறார் என தங்களது கருத்துக்களை ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.