ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் என்று கெத்தாக இருப்பதனால் இவர் கூட நடித்தால் ஈசியாக பிரபலமாகி விடலாம் என்று பல நடிகர்கள் அவர்களின் கனவாகவே நினைத்து நடித்து வருகிறார்கள். அப்படி இவருடன் நடித்து பலரும் சினிமாவில் முன்னுக்கு வந்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
அதில் ஒருவர் தான் ரஜினியின் படையப்பா படத்தில் மூத்த மாப்பிள்ளையாக நடித்த அப்பாஸ். இப்படத்தில் நடித்த பிறகு இவருடைய சினிமா இமேஜ் கொஞ்சம் மாறிவிட்டது. அதை வைத்து தொடர்ந்து பல படங்களில் சாக்லேட் பாய் ஆகவும், ஹீரோ, குணச்சித்திர நடிகர் மற்றும் வில்லன் போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து விட்டார்.
ஒரு நேரத்தில் இவர் ஹீரோவாக நடித்த படங்கள் அனைத்தும் செம ஹிட் ஆகி அதிலும் இவர் ரொமான்ஸ் ஹீரோக்கு பொருத்தமான நடிகர் என்று சொல்லும் அளவிற்கு பல பெண்களின் கனவு கண்ணனாகவும் இருந்திருக்கிறார். இவர் 90களில் காதல் தேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமா பயணத்தை ஆரம்பித்து சாக்லேட் ஹீரோ என்ற இமேஜை அடைந்தவர்.
அப்படிப்பட்ட இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் போன நிலையில் கொஞ்சம் காலமாக விளம்பரங்களில் நடித்தார். அதிலும் இவர் நடித்த ஆர்பிக் டாய்லெட் விளம்பரம் எல்லா மக்களிடமும் போய் சென்றடைந்தது. பிறகு சுத்தமாக இவருக்கு பட வாய்ப்பு இல்லாத நிலையில் பிழைப்புக்காக குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சென்று விட்டார்.
அங்கே இவரால் சமாளிக்க முடியாமல் பெட்ரோல் பல்க் மற்றும் மெக்கானிக் போன்ற வேலைகளை பார்த்து வந்தார். அதன் பின் இவருக்கு உடல் ரீதியான பல பிரச்சனைகளை சந்தித்தார். அதாவது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இவருடைய எடை அதிகரித்து பின்பு முழங்காலில் காயம் ஏற்பட்டு, வலது காலுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஒரு வழியாக மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இதனால் பழைய மாதிரி வேலை பார்க்க முடியாததால் ஏதோ கிடைக்கிற வேலையை பார்த்துக்கிட்டு இவருக்கு தெரிஞ்ச மெக்கானிக் வேலையை செய்து குடும்பத்தை ஓட்டி வருகிறார். ஒரு நேரத்தில் நடிப்பில் கொடிகட்டி பறந்தவருடைய நிலைமை இப்படியா என்று நினைக்கும் பொழுது மிகவும் வருத்தமாக இருக்கிறது.