துணிவு கண்மணியா இது.. அச்சு அசலாக கிருஷ்ணன் போல் இருக்கும் போட்டோ

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வசூலை பெற்று வந்தது. இந்நிலையில் அஜித்துக்கு இணையான கதாபாத்திரம் இந்த படத்தில் மஞ்சு வாரியக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. துணிவு படத்தில் இரண்டாவது ஹீரோ மஞ்சு வாரியர் என்று பேசப்பட்டது.

மஞ்சு வாரியர் தனது 17 வயதிலேயே சினிமாவில் நுழைந்த ஒரு முன்னணி ஹீரோயின் ஆக தற்போது 44 வயதிலும் வளம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் இவர் தனுசுடன் இணைந்து அசுரன் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்புக்கு பலராலும் பாராட்ட கிடைத்தது.

அதன் பிறகு துணிவு படத்தில் தான் மஞ்சு வாரியருக்கு வாய்ப்பு கிடைத்து. அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். மேலும் மஞ்சு வாரியர் நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு படகியாகவும் சிறந்து விளங்கி வருகிறார். சமீபத்தில் இணையத்தில் அவரது மகள் புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது.

அவரே இப்போது ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் 23 வயது உடைய அவரது மகள் ஹீரோயின்கள் டஃப் கொடுக்கும் விதமாக இருந்தார். இந்த சூழலில் மஞ்சு வாரியர் கிருஷ்ணன் வேஷம் போட்டு இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதைப் பார்க்கும்போது அச்சு அசலாக கிருஷ்ணன் போலவே காட்சி அளிக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் துணிவு கண்மணியா இது என ஆச்சரியம் அடைந்துள்ளனர். மேலும் இது ஒரு நடன விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்துள்ளது. இப்போது அவரது ரசிகர்களால் இந்த புகைப்படம் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

manju-warrier
manju-warrier