கொள்கை எதிரியோடு கூட்டணியா.. கமல் போல் அந்த பல்டி அடிப்பாரா விஜய்.?

Vijay: விஜய்யின் அரசியல் நகர்வுகள் ஒவ்வொன்றும் பிரமிக்க வைக்கிறது. அதே போல் அரசியல் வட்டாரத்தில் ஒரு சலசலப்பையும் ஏற்படுத்திக் கொண்டிருப்பதை மறுக்க இயலாது.

அவருடைய முதல் மாநாட்டில் தொடங்கி சமீபத்தில் நடந்த கண்டன போராட்டம் வரை அனைத்துமே தேசிய அளவில் கவனம் பெற்றது. அதேபோல் இது கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கான வாக்குகளையும் அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறது.

மக்களின் மனநிலையும் அவர் மீது சாயத் தொடங்கியுள்ளது. இதனால் 2026 தேர்தல் மீது தான் மீடியாக்களின் கவனம் இருக்கிறது. இந்நிலையில் தேர்தலில் விஜய்யின் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

கமல் போல் அந்த பல்டி அடிப்பாரா விஜய்.?

அதில் எடப்பாடி பழனிச்சாமி பெரும் கட்சி ஒன்று கூட்டணியில் இணைய போகிறது என சஸ்பென்ஸோடு கூறியிருந்தார். அது விஜய் தான் என்ற கணிப்புகளும் இருக்கிறது. ஆனால் அதிமுக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.

விஜய்யின் கொள்கை எதிரி மத்திய ஆளும் கட்சி தான் என்பதை அவர் வெளிப்படையாக சொல்லிவிட்டார். அப்படி இருக்கும் நிலையில் இந்த கூட்டணி இணைய வாய்ப்பே கிடையாது.

அப்படி என்றால் வரும் காலத்தில் திமுகவுடன் கூட்டணி இருக்குமா என்ற ஒரு கேள்வியும் இருக்கிறது. மாநில ஆளும் கட்சியும் தன்னுடைய எதிரி தான் என அவரும் பலமுறை சொல்லிவிட்டார்.

ஆனால் அடுத்தடுத்த தேர்தலில் அவர்களுடன் இணைந்து பயணிக்கலாம் என்ற முடிவை அவர் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் கமல் கட்சி ஆரம்பித்தபோது டிவியை உடைத்து மாஸ் காட்டினார்.

கடைசியில் பார்த்தால் எம்பி பதவிக்காக கூட்டணியில் இணைந்து விட்டார் என அவருடைய பெயர் டேமேஜ் ஆனது. அதனால் விஜயின் எதிர்கால முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவர் மக்கள் செல்வாக்கை பெற தான் நினைப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.