விஜய் பட ஹீரோயினுக்கு வந்த பிக்பாஸ் அழைப்பு.. ஓகே சொன்னா வேற லெவல்ல இருக்குமே!

விஜய்யுடன் சூப்பர் ஹிட் படம் ஒன்றில் ஜோடியாக நடித்த நடிகை ஒருவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு வந்துள்ளதாக ஒரு செய்தி இணையத்தில் காட்டுத் தீயை விட வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது.

விஜய்யுடன் ஒரு படம் நடித்து விட்டால் அந்த நடிகைகளுக்கும் மவுஸ் வந்துவிடுகிறது. அதன்பிறகு அவர்கள் வாழ்நாள் முழுவதும் நான் விஜய் பட நடிகை என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு விஜய் இன்று உச்சத்தில் உள்ளார்.

அப்படி விஜய்யின் ஆரம்ப காலகட்டங்களில் ரசிகர்களை கவர்ந்த படமாக அமைந்த பத்ரி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் பூமிகா சாவ்லா. விஜய்யை தொடர்ந்து சூர்யா போன்ற பல நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளார்.

இந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வந்த பூமிகா சாவ்லா சமீபத்தில் அண்ணி, அக்கா போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். வயது 40 ஆனாலும் இன்னும் இளமை ஊஞ்சலாடுகிறது.

இந்நிலையில் அடுத்ததாக தொடங்கவிருக்கும் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பூமிகா சாவ்லா கலந்து கொள்ள போகிறார் என்ற தகவல் வெளியாகி பயங்கர வைரல் ஆகி விட்டது. இதை கவனித்த பூமிகா சாவ்லா தானே முன்வந்து, பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ஐடியா இல்லை எனவும், இது குறித்து வெளியாகும் எந்த ஒரு செய்தியும் உண்மையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை பூமிகாவுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்திற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அவர் தான் டைட்டில் வின்னர் என்பதை ஆரம்பத்திலேயே எழுதி வைத்துக் கொள்ளலாம் என்கிறார்கள் பாலிவுட் வாசிகள்.

boomika-swimsuit-photo-cinemapettai
boomika-swimsuit-photo-cinemapettai