கின்னஸ் கிஷோர் இயக்கி, தயாரித்திருக்கும் படம் தாதா. இந்த படத்தில் நிதின் சத்யா கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் காயத்ரி, நாசர், மனோபாலா, யோகி பாபு, சிங்கமுத்து மற்றும் பலர் நடித்திருந்தனர். அண்மையில் தாதா படத்தின் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
அதாவது அந்த போஸ்டரில் யோகி பாபு மட்டும் தான் இடம் பெற்றிருந்தார். இது குறித்து யோகி பாபு பேசுகையில் அந்த படத்தில் கதாநாயகன் நித்தின் சத்யா தான். நான் அந்த படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தேன். நாலு சீனில் மட்டும் நடித்த என்னுடைய புகைப்படத்தை போட்டு ப்ரோமோஷன் செய்கிறார்கள் என்று யோகி பாபு கூறி இருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் தாதா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் யோகி பாபு மற்றும் நித்தின் சத்யா கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் பிரபலம் ஒருவர் பேசுகையில் வடிவேலுக்கு அடித்தபடியாக காமெடியில் கலைக்கி வருவது யோகி பாபு தான்.
அவரும் கஷ்டப்பட்டு தான் இந்த உயரத்தை அடைந்துள்ளார். ஆனால் தான் நடித்த படம் வெற்றி பெற வேண்டும் என்று கொஞ்சம் கூட எண்ணம் இல்லாமல் ஊடகங்களுக்கு தவறான பேட்டி கொடுத்து வருகிறார். இந்த படத்தில் அவர் நாலு சீனில் தான் நடித்தேன் என்று சொல்கிறார்.
தாதா படம் விரைவில் வெளியாக உள்ளது. நீங்களே பார்த்துவிட்டு சொல்லுங்கள், படம் முழுக்க யோகி பாபு நடித்துள்ளார். உச்சகட்ட வளர்ச்சியில் இருப்பதால் இதுபோன்ற ஆணவ செயலில் யோகி ஈடுபடுவது தவறான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதைப் பற்றி கேட்க தயாரிப்பு சங்கமும் இப்போது சரியாக செயல்படவில்லை. மேலும் வந்த புதிதில் ஆறு மாதம் விஷால் நன்றாக தனது பணியை செய்து வந்தார். பலர் செல்வாக்கால் அவரும் இப்போது திசை மாறி உள்ளார்.
பெரிய தயாரிப்பாளர்களுக்கு எந்த கவலையும் இல்லை. ஏனென்றால் உதயநிதி அவர்களின் படங்களை வாங்கி வெளியிட்டு விடுகிறார். ஆனால் சிறிய தயாரிப்பாளர்கள் சொந்த பணத்தை போட்டு படத்தை எடுத்து திரையரங்கு கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் சொந்த வீட்டை கூட விற்கும் நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளார்கள் என்று கூறியுள்ளார்.