தமிழ் சினிமாவில் என்னதான் ஆயிரம் ஆண் இயக்குனர்கள் இருந்தாலும் தனி ஒரு பெண்ணாக மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்து தற்போது ஆஸ்காருக்கு செல்லும் அளவுக்கு புகழ் பெற்றுள்ளவர்தான் சுதா கொங்கரா. 6 தேசிய விருதுகளை தட்டி தூக்கிய சூரரைப் போற்று திரைப்படத்திற்காக தேசிய விருதை பெற்ற அவர் அப்படத்தை தற்போது ஹிந்தியில் படமாக்கி கொண்டிருக்கிறார்.
ஹிந்தி ரீமேக்கில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் முன்னணி இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார். இதை அடுத்து அவர் மீண்டும் தமிழுக்கு எப்போது வருவார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அவருடைய அடுத்த திரைப்படம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.
அந்த வகையில் அவர் அடுத்ததாக பிசினஸ் மேக்னட் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக வைரலாக பேசப்படுகிறது. இந்த தகவல் உண்மைதானா என்பதை இயக்குனர் சுதா கொங்கரா உடைத்து பேசி உள்ளார். ஏற்கனவே இவர் ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தான் சூரரைப் போற்று படமாக எடுத்திருந்தார்.
அதை தொடர்ந்து மீண்டும் ஒரு பயோபிக் கதையை அவர் கையில் எடுத்துள்ளார். அவரின் முந்தைய திரைப்படத்தை காட்டிலும் இந்த பயோபிக் கதைக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் நாம் விரல் விட்டு எண்ணக்கூடிய மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவர் தான் இந்த ரத்தன் டாடா.
இவருடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக சுதா கொங்கரா எடுக்கப் போகிறார் என்ற தகவல் முற்றிலும் பொய்யானது என்று அவர் மறுத்துள்ளார். அத்துடன் சுதா கோங்கரா ரத்தன் டாடாவின் தீவிர ரசிகையாம். அவரைக் குறித்து பல நேரங்கள் வியந்ததும் உண்டாம்.
ஆனால் அவரின் வாழ்க்கை வரலாற்றை வைத்து படம் எடுக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்று தெரிவித்து இருக்கிறார். இதனால் தன்னுடைய அடுத்த படத்தின் மீது ரசிகர்கள் காட்டு ஆர்வத்திற்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.