விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கிட்டத்தட்ட 10 வாரங்கள் கடந்த நிலையில் பல புதிய டாஸ்க்களுடன் ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பிக் பாஸ் ஒரு சரியான களம் என்பதால் இதை பலர் பயன்படுத்திக் கொண்டு மிகப்பெரிய உயரத்தை அடைந்துள்ளனர்.
இந்த சீசனில் ஆரம்பத்தில் அதிகம் கவனிக்கப்படாத விக்ரமன் தன்னுடைய தனித்துவமான குணத்தால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தை கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக விக்ரமன் உள்ளார். பல அநீதிகளுக்கு இவர் குரல் கொடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் பயமின்றி துணிச்சலாக தன் மனதில் பட்ட கேள்வியை வெளிப்படையாக கேட்கக் கூடியவர். அதனால்தான் பிக் பாஸ் வீட்டில் பல பேருடன் இவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கனா காணும் காலங்கள் டாஸ்க் வைக்கப்பட்டது.
இதில் முதல் நாள் தமிழ் ஆசிரியராக இருந்த விக்ரமன் நல்ல கருத்துக்களை போதித்து ரசிகர்களிடமிருந்து பாராட்டைப் பெற்றார். மேலும் நேற்றைய எபிசோடில் காட்டில் உள்ள மரங்கள் ஆகியவற்றை ஒரு ஓவியமாக வரைந்திருந்தார். இந்த ஓவியத்தை விவரிக்கும் போது பழங்குடியினரின் வாழ்விடமாக இது உள்ளதாக கூறியிருந்தார்.
இப்போது காடுகளை அழிக்கப்படுவதாகவும், பழங்குடி மக்கள் அங்கிருந்து விரட்டப்படுவதாகவும் விக்ரமன் கருத்து சொல்லி இருந்தார். ஆனால் நேற்றைய விஜய் டிவி ஒரு மணி நேர எபிசோடில் இது ஒளிபரப்பாகவில்லை. அதேபோல் கடிதம் எழுதும் டாஸ்கிலும் விக்ரமன் அம்பேத்கரை பற்றி எழுதுகிறார்.
அந்தக் காட்சிகளும் எபிசோடில் வரவில்லை. இவ்வாறு விஜய் டிவி விக்ரமனை மட்டம் தட்டுவதாக அவரது ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். தான் வாழ்ந்தால் மட்டும் பத்தாது, தன்னை சுற்றி உள்ளவர்களையும் வாழ வைக்க வேண்டும் என்று அநீதிகளுக்கு குரல் கொடுக்கும் விக்ரமனை ஒவ்வொரு முறையும் விஜய் டிவி நிராகரித்து வருகிறது. இதனாலையே விக்ரமனுக்கு ரசிகர்களுக்கு மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.