விஜய்யிடமே வேலையை காட்டிய அட்லீ.. உச்சகட்ட கோபத்தில் கதறவிட்ட தளபதி

விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வரும் இப்படத்தை பற்றிய பேச்சு தான் இப்போது அதிகமாக இருக்கிறது. இவ்வாறு உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்தடுத்த படங்களுக்கான வேலையையும் பார்த்து வருகிறார்.

அதில் அவர் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீயுடன் இணைய இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளிவந்த படங்கள் அனைத்தும் வெற்றி வாகை சூடியது. அதனாலேயே விஜய் மீண்டும் தன் ஆஸ்தான இயக்குனருடன் இணைய ஆர்வம் காட்டி வந்தார்.

ஆனால் இப்போது அட்லீ வேண்டாம் என்று விஜய் வேறு இயக்குனரை தேடி வருகிறாராம். இது குறித்து விசாரித்ததில் அதிர்ச்சியான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இந்த திரைப்படத்திற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜய்க்கு 150 கோடியும், அட்லீக்கு 30 கோடியும் சம்பளம் நிர்ணயித்திருந்தது.

ஆனால் அட்லீ, நான் இப்போது பான் இந்தியா இயக்குனர். அதனால் எனக்கு 50 கோடி சம்பளம் வேண்டும் என்று கட்டளையிட்டு இருக்கிறார். இதனால் சன் பிக்சர்ஸ் அதிர்ந்து போனாலும் வேறு வழியின்றி விஜய் நடிக்க சம்மதித்ததே போதும் என்று அந்த சம்பளத்தை தர முன் வந்திருக்கிறது. ஆனாலும் இந்த கூட்டணி இப்போது இணையாமல் போய் உள்ளது.

ஏனென்றால் அட்லீ தன்னிடம் ஒரு வார்த்தை கூட இது குறித்து பேசாமல் தன் இஷ்டத்திற்கு செய்ததால் விஜய் அவர் வேண்டாம் என்று முடிவெடுத்து இருக்கிறார். அதனால் தற்போது வேறு ஒரு இயக்குனரை தேடும் வேட்டையில் சன் பிக்சர்ஸ் இறங்கி இருக்கிறது. மேலும் இந்திய அளவில் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி இருக்கும் லோகேஷ் கூட இந்த அளவுக்கு சம்பளம் கேட்கவில்லை.

ஆனால் பாலிவுட் போனதும் அட்லீ கொஞ்சம் ஓவராக நடந்து கொள்வது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் விஜய்யிடமே அவர் தன் வேலையை காட்டியதால் தான் கிடைத்த வாய்ப்பும் இப்போது கைவிட்டு போயுள்ளது. அந்த வகையில் தளபதி அட்லீ மீது இப்போது உச்சகட்ட கோபத்தில் இருக்கிறாம்.