வில்லனா இருந்த உன்ன ஹீரோவா ஆக்கினது தப்பா போச்சு.. இமேஜ் பார்க்கும் சரத்குமார், புலம்பி தவிக்கும் தயாரிப்பாளர்

Actor Sarathkumar: தன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தவர்களை ஒருபோதும் மறக்க கூடாது என்ற கூற்றுக்கு எதிராக தற்பொழுது பிரபல நடிகர் ஒருவர் மேற்கொண்ட செயல் அப்படத்தின் தயாரிப்பாளரை மிகுந்த வருத்தத்திற்கு ஆளாக்கியுள்ளது.

வளர்ந்து வரும் தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்திலேயே, படங்களை ஏற்று தயாரிப்பில் வெற்றி கண்டு வந்த பிரபலம் தான் கே டி குஞ்சு மோன். மலையாள மொழி படங்களில் அறிமுகமாகி, அதன் பின் தமிழில் இவர் மேற்கொண்ட எண்ணற்ற படங்கள் மாபெரும் ஹிட் கண்டுள்ளது.

அவ்வாறு இருக்க, தற்போது இவர் தயாரிப்பில் நடிக்க மறுத்து வரும் ஹீரோ யார் என்பதை இத்தொகுப்பில் காணலாம். 1992ல் பவித்ரன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் சூரியன். இப்படத்தில் சரத்குமார், ரோஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். வில்லனாகவே நடித்து வந்த இவருக்கு இப்படத்தில் ஹீரோவாகும் வாய்ப்பினை கொடுத்தார் தயாரிப்பாளர்.

நேர்மையான போலீஸ் அதிகாரியாய் மொட்டை கதாபாத்திரத்தில் சரத்குமார் இடம்பெற்று இருப்பார். இப்படத்தின் வெற்றியை கொண்டே தனக்கான அங்கீகாரத்தை பெற்று, முன்னணி கதாநாயகனாய் வலம் வந்தார் சரத்குமார் என்றால் அது மிகையாகாது.

அவ்வாறு இருக்க தற்பொழுது வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரத்திலும் தன் செகண்ட் இன்னிங்ஸில் தெறிக்கவிட்டு வரும் சரத்குமார், பிரபல தயாரிப்பாளரான குஞ்சுமோன் படத்தை நிராகரித்துள்ளார். சமீபத்தில் இவரின் போர் தொழில் படம் வெளியாகி வெற்றியை பெற்றுள்ளது.

இது போன்று ஹீரோவுக்கு சமமான கேரக்டரில் மட்டும் தான் நடிப்பேன். உங்கள் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தால் என் இமேஜ் பாதிக்கப்படும், மன்னிக்கவும் ஒருபொழுதும் நடிக்க முடியாது என வெளிப்படையாகவே கூறிவிட்டாராம். அதிலும் குறிப்பாக நிறைய பேர் வேண்டாம் என சொல்லி நான் பார்த்து வளர்ந்தவர் தானே என ஒரு உரிமையோடு இவரிடம் கேட்கும் போது கொஞ்சம் கூட நன்றி இல்லாதவாறு கேவலமாக நடந்து கொண்டதை எண்ணி புலம்பி வருகிறார் கே டி குஞ்சு மோன்.