என் கேரியரை வளர விடாமல் தடுத்த நயன்தாரா.. ரஜினியுடன் நடிக்க இருந்த வாய்ப்பை நழுவ விட்ட நடிகை

அனைத்து முன்னணி ஹீரோகளுக்கும் இணையாக மாஸ் காட்டி வரும் ஒரே நடிகை என்றால் அது நயன்தாரா மட்டும்தான். இவர் எந்த படங்களில் நடித்தாலும் அது கண்டிப்பாக வெற்றி அடையும் என்பது அனைவரும் அறிந்ததே. அதனாலேயே இவருடைய சம்பளம் என்னவென்று இவர் தீர்மானித்து வாங்கும் அளவிற்கு வளர்ந்து வந்திருக்கிறார். இதனால் தான் இவரால் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடிகிறது.

அப்படிப்பட்ட இவர் சில படங்களில் இவருடைய ஆலோசனைகளை அதிகமாக கொடுத்து வருகிறார். ஆனால் அது மற்றவர்களை பாதிக்காத வரை எந்த பிரச்சினையும் இல்லை. அப்படித்தான் ரஜினி நடிப்பில் வெளிவந்த குசேலன் திரைப்படத்தில் ஒரு நடிகை உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். அப்பொழுது படக்குழுவினர் அந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஒரு காட்சியில் நடிக்க இவரை அழைத்து இருக்கிறார்கள்.

இவரும் ரஜினி கூட நடிப்பதற்காக ஆசையுடன் ஓகே என்று சம்மதித்திருக்கிறார். ஆனால் நயன்தாரா, சம்பந்தமே இல்லாமல் இந்த கேரக்டருக்கு இவங்க தேவை இல்லை இந்த காட்சியை தவிர்த்து விடுங்கள் என்று சொல்லி நடிக்க விடாமல் செய்துவிட்டாராம். அதனால் தான் என் கேரியர் வளராமல் போய்விட்டது என்று மிகவும் வருத்தப்பட்டு இருந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

அதேபோல் தெலுங்கில் அருந்ததி படத்தில் நடிக்க இவருக்கு தான் முதலில் வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால் இவருக்கு ஏற்பட்ட பயத்தால் நடிக்க மாட்டேன் என்று சொன்னதால் அந்த வாய்ப்பு அனுஷ்காவுக்கு சென்றது. அதன் பின் அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக ஆனது. இப்படி கிடைத்த இரண்டு வாய்ப்பு கைநழுவி போய்விட்டது என்று தற்போது சொல்லி புலம்பி வருகிறார். அவர் வேறு யாருமில்லை மம்தா மோகன்தாஸ்.

இவர் விஷால் நடிப்பில் வெளிவந்த சிலப்பதிகாரம் மற்றும் தடையறத் தாக்க போன்ற ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். பல வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டும் நடிப்பதற்கு வருகிறார். ஆனால் இவர் படங்களில் நடிக்காமல் இருந்தாலும் சோசியல் மீடியாவில் பரபரப்பாக செயல்படக் கூடியவர்.

இப்பொழுது மறுபடியும் நடிக்க வருவதால் இவரை விட்டு கைநழுவி போன வாய்ப்புகளைப் பற்றி சில பதிவுகளை பதிவிட்டு வருகிறார். இவர் நடிகை மட்டுமல்ல, திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகி ஆவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களில் பணிபுரிந்து இருக்கிறார். அப்படிப்பட்ட இவருக்கு மறுபடியும் வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறார்.