கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் நடிகைகளில் இந்த நடிகையும் ஒருவர். வாய்ப்பு கிடைக்கிறதே என்று எல்லா படங்களிலும் நடிக்காமல் தனக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் இவர் அதிக அளவு படங்களில் நடித்தது கிடையாது. ஆனாலும் இவர் ஒரு படம் நடித்தாலும் வருடக் கணக்கில் இவர் பெயரை சொல்லும் அளவுக்கு அந்த படம் இருக்கும்.
அவர் வேறு யாரும் அல்ல தற்போது ரசிகர்களால் ஷோபனா, தாய்க்கிழவி என்று கொண்டாடப்பட்டு வரும் நித்யா மேனன் தான். சமீபத்தில் தனுசுடன் இணைந்து இவர் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் வேற லெவலில் கொண்டாடப்பட்டது. சொல்லப்போனால் அந்த படம் முழுவதும் இவர் மட்டும்தான் என்று சொல்லும் அளவுக்கு அதிகமாக ஸ்கோர் செய்திருந்தார்.
சில காலங்களாக படமே ஓடாமல் தத்தளித்துக் கொண்டிருந்த இவருக்கு திருச்சிற்றம்பலம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இப்படி திடீரென அடித்த அதிர்ஷ்டத்தால் தற்போது இவர் முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு உச்சாணி கொம்பில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.
படம் வெளிவந்து சில மாதங்கள் ஆன பின்னும் இவர் நடித்த ஷோபனா கேரக்டர் இன்றும் இளைஞர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் இவரை தங்கள் படங்களில் புக் செய்வதற்காக தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் வரிசை கட்டி நிற்கிறார்கள்.
இப்படி இவரை சுற்றி வீசும் அதிர்ஷ்ட காற்று நிலைக்காத வகையில் இவர் காரியம் ஒன்றை செய்து கொண்டிருக்கிறார். அதாவது இவரை படங்களில் புக் செய்ய முயற்சி செய்யும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களால் இவரை தொடர்பு கொள்ள முடியவில்லையாம். அந்த அளவுக்கு அம்மணி தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறாராம்.
ஏனென்றால் இவருடைய கால்ஷூட் சம்பந்தப்பட்ட அனைத்தையும் அவர் மும்பை கம்பெனிக்கு கொடுத்து விட்டாராம். அந்த வகையில் யாரும் இவரை நேரடியாக தொடர்புகொள்ள முடியாது. அதனால் அந்த மும்பை கம்பெனியை தொடர்பு கொள்ள முயற்சித்தாலும் அவ்வளவு எளிதில் அவர்களை அணுக முடியவில்லை. இதனால் இவருக்கு கிடைக்கும் வாய்ப்பு தற்போது பறிபோய் வருகிறது.