சக பெண் தோழியுடன் நெருக்கமாக விஜய் டிவி ஜாக்லின்.. போட்டோவை பார்த்து ஏடாகூட கேள்வி கேட்ட ரசிகர்கள்

கடந்த சில நாட்களாகவே விஜய் டிவியில் தொகுப்பாளராகவும் நடிகையாகவும் வலம் வரும் ஜாக்குலின் என்பவரை பற்றி செய்திகள் தான் இணையதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

சும்மாவே நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் நடிகைகள் மற்றும் பிரபலங்களை கிண்டலடிப்பார்கள். இதை அனைவரும் தெரிந்து கொண்டும் கடந்து செல்வது தான் புத்திசாலித்தனம் என பலரும் இதைக் கண்டு கொள்ள மாட்டார்கள்.

ஆனால் அதற்கு ரிப்ளை செய்யும் சிலரும் எக்குதப்பாக ரசிகர்களிடம் மாட்டிய சின்னாபின்னமாகி விடுவார்கள். அந்த வரிசையில் மாட்டியுள்ளவர் தான் விஜய் டிவி ஜாக்லின்.

ஜாக்குலின் பெண் தோழி ஒருவருடன் எடுக்கும் புகைப்படங்களை தொடர்ந்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். அந்த தோழி பார்ப்பதற்கு ஆண் போலவே ஹேர் கட்டிங் எல்லாம் செய்து கொண்டு வித்தியாசமாக இருப்பார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவர் தோழியை கிண்டல் செய்ததோடு மட்டுமில்லாமல் ஜாக்லினுக்கும் அந்த தோழிக்கும் ஓரின தவறான உறவு இருக்கிறது எனவும் தொடர்ந்து அசிங்கப்படுத்தி வருகின்றனர். ஒருவரை விமர்சிக்கலாம். ஆனால் இவ்வளவு தரக்குறைவாக விமர்சிக்க கூடாது. இருந்தாலும் நெட்டிசன்கள் தொடர்ந்து அதே வேலையை செய்து வருவதால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

போகிற போக்கை பார்த்தால் இனி அனைத்து பிரபலங்களும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் உள்ள கமெண்ட் பாக்ஸ்களை ஆப் பண்ணி வைத்தால்தான் தப்பிக்க முடியும் போல. இதேபோல்தான் ஜாக்குலின் தன்னுடைய சக தொகுப்பாளர் ரக்சன் என்பவருடன் காதல் கிசுகிசுவில் இருப்பதாக வதந்திகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

jacqueline-frnd-latest-photo
jacqueline-frnd-latest-photo