ஜெய் பீம் படத்தின் நடிகர் மணி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த குட் நைட் திரைப்படம் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கக்கூடிய படமாகவும், செம ஜாலியாகவும் திரையரங்கில் ஹவுஸ்புல் ஆகும் அளவிற்கு வெளிவந்தது. இவர் என்னதான் ஜெய் பீம் படத்தில் நடித்திருந்தாலும் பெரிய அடையாளத்தை கொடுத்தது குட் நைட் படம் தான் என்று சொல்லலாம்.
அந்த அளவிற்கு இப்படத்தின் மூலம் மிகவும் ஃபேமஸ் ஆகிவிட்டார். இதனால் இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக பல படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆனால் இந்நிலையில் நிதானத்தை விட்டு விடக்கூடாது என்று ஒவ்வொரு படத்தின் கதையையும் பொறுமையாக கேட்டு வருகிறார்.
அத்துடன் இவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு தான் அடுத்த படத்தில் என்னால் நடிக்க முடியும் என்று இயக்குனர்களிடம் தெளிவாக இவருடைய நிலைமையை கூறியிருக்கிறார். அது மட்டும் இல்ல இவருடைய மிகப்பெரிய கனவே சினிமாவில் பெரிய இயக்குனராக வலம் வர வேண்டும் என்பதுதான்.
அதனால் இந்த புகழை வைத்துக்கொண்டு கூடிய விரைவில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று முழு முயற்சியில் இறங்கியுள்ளார். என்னதான் இவருடைய கனவாக இருந்தாலும் இப்பொழுது தான் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதற்குள் பறக்க ஆசைப்படுகிறார் என்று சொல்வதற்கு ஏற்ப படத்தை இயக்கும் முயற்சியில் கதையே தயார் செய்து அதற்காக விஜய் சேதுபதியிடம் கேட்டிருக்கிறார்.
இதன் மூலம் கோடியில் பெரிய லாபத்தை பெற்று விடலாம் என்று விஜய் சேதுபதியை குறி வைக்கிறார். அத்துடன் இந்த கதையை உங்களை நினைத்து தான் உங்களுக்காக உருவாக்கி இருக்கிறேன் என்று கூறி அவரிடம் சம்மதத்தையும் வாங்கி விட்டார். இவர்கள் இருவரும் ஏற்கனவே நெருங்கிய நண்பர்கள் அதனாலேயே விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டார்.
பின்பு படத்தை இயக்கும் முயற்சியில் உள்ளதால் முக்கியமான படங்களில் கதையை கேட்டு கதாநாயகனாகவும் நான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். அதற்காக இனி இவரை தேடி வரும் வாய்ப்புகளில் நடிப்பதற்காக இரண்டு கோடி சம்பளம் கேட்டு வருகிறார். ஏனென்றால் அந்த அளவிற்கு குட்நைட் படத்தின் மூலம் வளர்ச்சி அடைந்திருக்கிறார். மேலும் இவர் கேட்ட சம்பளத்தை கொடுக்கலாம் ஒரு நல்ல நடிகர் தான் என்று சினிமா பிரபலங்கள் பலரும் கூறி வருகின்றனர்.