அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கிக் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள்மோகன், யோகி பாபு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
மேலும் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் பிரபல நடிகை தமன்னாவும் இந்த படத்தில் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் கடந்த சில வருடங்களாகவே எந்த பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்தார்.
தெலுங்கு திரை உலகில் ஒன்றிரண்டு படங்களைத் தவிர இவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் வரவில்லை. ஆனால் இப்போது அவருடைய கால்சூட் நிரம்பி வழிகிறது. இன்னும் இரண்டு வருடங்களுக்கு அம்மணி ரொம்ப பிசியாக இருக்கிறார்.
அந்த வகையில் இவர் தற்போது தெலுங்கில் போலா சங்கர் உட்பட 3 திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோன்று ஹிந்தியில் மூன்று படங்களும், மலையாளத்தில் நடிகர் திலீப்புடன் ஒரு படமும் அவர் கைவசம் இருக்கிறது.
அதனால் தமன்னா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிஸியாகி இருக்கிறார். மேலும் பல இயக்குனர்களும் இவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க அணுகி வருகிறார்கள். இதனால் அவர் தற்போது நெல்சனிடம் ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
என்னவென்றால் ஜெயிலர் திரைப்படத்தில் தன்னுடைய போர்ஷனை விரைவில் ஷூட் செய்து முடித்து விடுமாறு கேட்டிருக்கிறார். மேலும் தனக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும், அதனால் இந்த படத்தின் ஷூட்டிங்கில் இரவு பகல் பாராமல் கலந்து கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
அந்த வகையில் தமன்னாவுக்கு ஜெயிலர் படத்தால் அதிர்ஷ்டம் கூரையை பொத்துக் கொண்டு கொட்டி இருக்கிறது. சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் ராசி தான் அவருக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டத்தை கொடுத்ததாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.