மூன்றே நாளில் இத்தனை கோடியா?. இண்டஸ்ட்ரியல் ஹிட் கொடுக்க தயாராகும் ஜெயிலர்

Jailer Collection Report: நெல்சன் திலிப் குமார்- சூப்பர் ஸ்டார் ரஜினி கூட்டணியில் வெளியான ஜெயிலர் படம் தமிழகத்தில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது. ஜெயிலர் படம் புதிய வசூல் சாதனை நிகழ்த்தும் என படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே பலரும் கணித்த நிலையில் அது உண்மையாகி வருகிறது.

அதிலும்  கடந்த வியாழக்கிழமை அன்று வெளியான ஜெயிலர் திரைப்படம் இன்று மூன்றாவது நாள் முடிவில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. கடந்த 10ம் தேதி வெளியான ஜெயிலர் கண்ணா பின்னான்னு வசூலை தட்டி தூக்கிக் கொண்டிருக்கிறது.

அதிலும் வீகென்ட் நாளான இன்று, ரிலீஸ் ஆன மூன்றாவது  நாள் முடிவில் 210 கோடியை கடந்துள்ளது. அது மட்டுமல்ல நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால்  சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அலை அலையாய் திரையரங்கில்  குவிவது உறுதி. இதனால் 4வது நாளான நாளை 280 கோடியை ஜெயிலர் வசூலித்து விடும்.

அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 15 ஆம் நாள் இறுதியில் 370 கோடியையும்  அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 18ஆம் தேதி முடிவில் 430 கோடியையும் கடந்துவிடும். அது மட்டுமல்ல படம் வெளியாகி 10-வது நாளான  ஆகஸ்ட் 20ஆம் தேதி இறுதியில் ஜெயிலர் நிச்சயம் 500 கோடியை கடந்து இன்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்துவிடும்.

ஏனென்றால் அந்த அளவிற்கு ஜெயிலரின் வசூல் வேகம் எடுத்து வருகிறது. இது மட்டுமல்ல 600 கோடி, 700 கோடி என ஒரே மாதத்தில் தமிழ் சினிமாவின் அடையாளமாக உலக அளவில்  ஜெயிலர் வசூலை தட்டி தூக்க போகிறது. இதனால்  படக்குழுவினர் மட்டுமல்ல ஒட்டுமல்ல திரை உலகமே ஜெயிலர் படத்தின் கலெக்சனை பார்த்து மிரண்டு போய் உள்ளனர்.

 அதுமட்டுமல்ல 72 வயதிலும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நான் மட்டுமே என்பதை ஜெயிலர் படத்தின் மூலம் மறுபடியும் ரஜினி நிரூபித்து காட்டிஇருக்கிறார். இதை வைத்து இப்போது சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் காலரை தூக்கி கெத்து காட்டுகின்றனர்.